சினிமா

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்.. வழக்குப் பதிவு செய்த மும்பை போலிஸ்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்.. வழக்குப் பதிவு செய்த மும்பை போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரன்வீர் சிங். இவர் தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவது வழக்கம். அப்படி வெளியிடும் படங்கள் எப்போதும் வைரலாகும்.

இந்நிலையில் அப்படி தனது சமூகவலைதளத்தில் நடிகர் ரன்வீர் சிங் வெளியிட்ட புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் துணிகள் இல்லாமல் நடிகர் ரன்வீர் சிங் நிர்வாணமாக இருந்ததுதான்.

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்.. வழக்குப் பதிவு செய்த மும்பை போலிஸ்!

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. குறிப்பான பெண்கள் இப்படி புகைப்படம் வெளியிட்டிருந்தால் இந்த சமூகம் எப்படிப் பேசியிருக்கும் என மாதர் அமைப்புகளைச் சேர்ந்த பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் நடிகர் ரன்வீர் சிங்கின் இந்த புகைப்படத்தைக் கண்டித்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ரன்வீர் சிங்கிற்கு துணிகள் சேகரிக்கும் போராட்டம் நடந்துள்ளது. இப்படிப் பல வடிவங்களில் எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நிர்வாண புகைப்படம் வெளியிட்ட பிரபல பாலிவுட் நடிகர்.. வழக்குப் பதிவு செய்த மும்பை போலிஸ்!

இந்நிலையில் நடிகர் ரன்வீர் சிங் மீது மும்பை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் வேதிகா சவுபே செம்பூர் என்பவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் மும்பை போலிஸார் நடிகர் ரன்வீர் சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories