சினிமா

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்திற்குக் கலகத் தலைவன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள்' படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் 'மாமன்னன்' படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார்.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?

இதில் நடிகர் வடிவேலு, மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில், நடிகை கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிக் கட்டத்தை எட்டியதை அடுத்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு.. படத்தின் பெயர் என்ன தெரியுமா?

இந்நிலையில் 'மீகாமன்', 'தடம்' படங்களின் இயக்குநர் மகிழ் திருமேனியுடன் நடிகர் உதயநிதி கைகோத்திருக்கிறார். நடிகை நிதி அகர்வால் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு 'கலகத் தலைவன்' என பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து 'கலகத் தலைவன்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories