சினிமா

குடும்ப அமைப்பில் அக்கா-தம்பிக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?.. ஜோ அண்ட் ஜோ படத்தின் கதை என்ன?

அக்கா-தம்பிக்கு இடையே குடும்பங்களில் நிகழும் முரண்களும் சண்டைகளும் படத்தின் முதற்பகுதியில் அற்புதமாக ரசிக்கும்படி நிறைக்கப்பட்டிருக்கிறது.

குடும்ப அமைப்பில் அக்கா-தம்பிக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?.. ஜோ அண்ட் ஜோ படத்தின் கதை என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

எவ்வளவு பேசினாலும் மலையாள சினிமாக்கள் முன் வைக்கும் அற்புத மொழியை நிகராக்கிட முடியாது. மலையாள சினிமாவைக் கொண்டாடுவதே ‘மிகை’ எனப் பேசும் காலமிது என்றாலும், நன்றாக இருக்கும் படங்களை வேறு எப்படிதான் பாராட்டிட முடியும்?

அற்புதத் திரைமொழி கொண்ட மலையாள சினிமாக்களின் வரிசையில் வந்திருக்கும் இன்னொரு படம் ஜோ அண்ட் ஜோ. ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

ஜோ அண்ட் ஜோ படத்தில் அப்படியென்ன அற்புதம் இருக்கிறது?

கதை கோவிட் லாக்டவுன் சமயத்தில் நடக்கிறது. கேரளாவின் ஒரு கிராமத்தில் வசிக்கும் ஒரு குடும்பம். வீட்டில் அப்பா, அம்மா, மகள், மகன் ஆகியோர் வசிக்கின்றனர். அக்காவின் பெயர் ஜோமோள். தம்பியின் பெயர் ஜோமோன். இந்த இரண்டு ‘ஜோ’க்களுக்கு இடையே நடக்கும் கதைதான் ஜோ அண்ட் ஜோ.

குடும்ப அமைப்பில் அக்கா-தம்பிக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?.. ஜோ அண்ட் ஜோ படத்தின் கதை என்ன?

ஜோமோனுக்கு வீட்டில் அதிகச் செல்லம். ஜோமோளுக்கோ வீட்டில் அதிக வேலை. காரணம், ஜோமோளை மணமுடித்துக் கொடுக்க வேண்டியிருப்பதால், அவளை ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக தயாரிக்கும் வேலையில் அவரின் தாய் இருக்கிறார். மறுபக்கத்தில் ஜோமோனுக்கு எந்தவித அழுத்தமும் இல்லை. இணைய வழி வகுப்புகளில் கலந்து கொள்ளாவிட்டாலும் கேள்வி இல்லை. நண்பர்களோடு சுற்றுகிறான். நண்பர்கள் ‘தம்’ அடிக்கிறார்கள். மூன்று நண்பர்களில் ஒருவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். பிற இருவரும் அவனுக்கு உதவுகிறார்கள். இன்னொரு நண்பன் ரகசியமாக ஜோமோளைக் காதலிக்கிறான். மூன்றாமவன்தான் ஜோமோன்.

பொதுவாக அக்கா-தம்பிக்கு இடையே குடும்பங்களில் நிகழும் முரண்களும் சண்டைகளும் படத்தின் முதற்பகுதியில் அற்புதமாக ரசிக்கும்படி நிறைக்கப்பட்டிருக்கிறது.

குடும்ப அமைப்பில் அக்கா-தம்பிக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?.. ஜோ அண்ட் ஜோ படத்தின் கதை என்ன?

படத்தின் பிரதான முடிச்சு கிட்டத்தட்டப் படத்தின் பாதியில் விழுகிறது. வீட்டின் கேட்டருகே ஒரு காதல் கடிதத்தை கண்டெடுக்கிறான் ஜோமோன். ‘அன்புள்ள ஜோ’ எனத் தொடங்கி கடிதம் எழுதப்பட்டிருக்கிறது. உடனே அவன் அக்கா மீது சந்தேகம் கொள்கிறான். கடிதத்தைப் பற்றி நண்பர்களிடம் சொல்ல, ஜோமோள் மீது ரகசியக் காதல் கொண்டிருக்கும் நண்பன் படபடப்பாகி கடிதம் எழுதியவனைக் கண்டுபிடிக்கத் ஜோமோனைத் தூண்டி விடுகிறான். மறுபக்கம் ஜோமோளும் அக்கடிதத்தைக் கண்டெடுக்கிறாள். அவளுக்கு ஜோமோன் யாரையோ காதலிக்கிறானென சந்தேகம். அவள் துப்பறியத் தொடங்குகிறாள்.

இருவரில் யாருக்குக் கடிதம் எழுதப்பட்டது என்பதும் அதை எழுதியது யார் என்பதும் படத்தில் இறுதி ட்விஸ்ட்டாக விரிகிறது.

குடும்ப அமைப்பில் அக்கா-தம்பிக்கு சம முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதா?.. ஜோ அண்ட் ஜோ படத்தின் கதை என்ன?

ஒரு சாதாரண குடும்பக் கதையாக விரிந்து அக்கா-தம்பி மோதலென நகைச்சுவையுடன் நகரும் கதையினூடாக, சோம்பேறியாக இருந்தாலும் ஆணுக்குக் குடும்ப அமைப்பில் கொடுக்கப்படும் முக்கியத்துவமும் பெண்ணுக்கு அளிக்கப்படும் ஒடுக்குமுறையும் தெளிவாக முன் வைக்கப்படுகிறது.

குடும்ப எண்டெர்டெயினராக அமைக்கப்படும் கதையில் கூட சமூகப் பொறுப்புணர்வு மிக்க கருத்து இழையோடுவதால்தான் மலையாள சினிமாக்கள் அற்புதமாகின்றன போலும்.

banner

Related Stories

Related Stories