சினிமா

"என்னங்க.. என்ன கெட் அப் போட்டாலும் சூட் ஆகுது." - TR ஆக மாறிய ARR.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் புகைப்படத்தை, மற்ற பிரபலங்கள் உருவத்தை போன்று உருவாக்கி இணையவாசி ஒருவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

"என்னங்க.. என்ன கெட் அப் போட்டாலும் சூட் ஆகுது." - TR ஆக மாறிய ARR.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ் மட்டுமின்றி இந்திய திரை உலகில் மிகவும் பிரபலமான இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரகுமான். 'ரோஜா' படம் மூலம் பிரபலமான இவர், உலக அளவில் பேசப்படும் இசையமைப்பாளராக தற்போது இருந்து வருகிறார்.

"என்னங்க.. என்ன கெட் அப் போட்டாலும் சூட் ஆகுது." - TR ஆக மாறிய ARR.. இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் !

90'ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ் வரை மிகவும் விருப்பமான இசையமைப்பாளராக விளங்கும் இவர், அவ்வப்போது ஆல்பம் சாங்கும் வெளியிடுவார்.

அந்த வகையில் கடந்த 2010ஆம் ஆண்டு கலைஞரின் கைவண்ணத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான "செம்மொழியான தமிழ் மொழியாம்" பாடல் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றது. அண்மையில் கூட 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது 'பொன்னியின் செல்வன்' படத்திற்கும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இவரது புகைப்படத்தை பயன்படுத்தி பல்வேறு பிரபலங்களுடன் இணைத்து இணையவாசிகள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர். அதில், கிரிக்கெட் வீரர் மலிங்கா, கால்பந்து வீரர் மார்சலோ, ஜேம்ஸ் வசந்தன், யுவன் சங்கர் ராஜா, டி ராஜேந்தர், சிம்பு போன்ற பிரபலங்களின் உருவத்தோற்றத்தில் இவரை காண முடிகிறது.

இது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்த இணையவாசி ஒருவர் "என்னங்க இது.. என்ன கெட் அப் போட்டாலும் சூட் ஆகுது" என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories