சினிமா

’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

தனது கணவர் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என நடிகை மீனா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மீனா. முன்னணி நடிகர்களுடன் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் தனக்கு என்று தனி பட்டாளத்தை தக்கவைத்தவர். தற்போது நாயகி பாத்திரங்களைத் தவிர்த்து கதைக்கு ஏற்ற பாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார்.

நடிகை மீனாவிற்கு 2009ம் ஆண்டு வித்யாசாகர் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கணவர் வித்யாசாகருக்கு சில மாதங்களாகவே நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!
Fox Media Hub

இதனால் அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். மேலும் அவரது நுரையீரல் முழுமையாக செயலிழந்ததால் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை செய்யத் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவருக்கு நுரையீரல் உறுப்பு தானமாகக் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த வித்யாசாகர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் ஜூன் 29ம் தேதி அடக்கம் செய்யப்பட்டது. இவரின் இறப்பை அடுத்து நடிகை மீனாவிற்கு சக நடிகர்கள் மற்றும் அவரின் ரசிகர்கள் இரங்கள் தெரிவித்து ஆறுதல் கூறிவருகின்றனர்.

’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

இதையடுத்து தனது கணவர் குறித்து தவறான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என உருக்கமான அறிக்கை ஒன்றை நடிகை மீனா வெளியிட்டுள்ளார். நடிகை மீனா சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்பான எனது கணவர் இழப்பால் நான் மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். எனது கணவர் குறித்த தவறான தகவல்களைப் பரப்புவதை நிறுத்துங்கள்.

’என் கணவர் இறப்புக்கு இதுதான் காரணம்..’ : தவறான தகவல் பரப்புவோருக்கு மீனா விடுத்த உருக்கமான வேண்டுகோள்!

இந்த கடினமா சூழ்நிலையில் எங்கள் குடும்பத்துடன் நின்ற அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் முதலமைச்சர், சுகாதார அமைச்சர், அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories