சினிமா

“நாயகன் மீண்டும் வரான்..” : மன்னிப்புக் கேட்ட Walt Disney - கேப்டனாக வருகிறார் ஜாக் ஸ்பாரோ!

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்த்தில் 'ஜாக் ஸ்பரோ' கதாபாத்திரத்தில் மீண்டும் ஜானி டெப் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“நாயகன் மீண்டும் வரான்..” : மன்னிப்புக் கேட்ட Walt Disney - கேப்டனாக வருகிறார் ஜாக் ஸ்பாரோ!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' திரைப்படத்தில் 'ஜாக் ஸ்பரோ' என்ற கதாபாத்திரம் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானவர் ஜானி டெப். இதுவரை இந்த படத்தில் வெளியான 5 பகுதிகளிலும் ஜாக் ஸ்பரோ கதாபாத்திரத்தில் ஜானி டெப் தான் நடித்துள்ளார். ஆனால் அடுத்து வரவிருக்கும் இந்த படத்தின் 6-வது பாகத்தில் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டுள்ளதாக, அந்த படத்தின் உரிமை நிறுவனமான Disney அறிவித்திருந்தது.

காரணம் கடந்த 2018 ஆம் ஆண்டு, பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதிய ஜானி டெப்பின் மனைவியும், நடிகையுமான ஆம்பர் ஹெர்ட், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும், தான் குடும்பவன்முறையை எதிர்கொண்டதாகவும் ஜானி டெப்பை மறைமுகமாக குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் மிகவும் சர்ச்சைக்குள்ளக்கப்பட்ட நிலையில், ஜானி டெப்பு மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. இதனால் அவருக்கு வந்த பட வாய்ப்புகள் அனைத்தும் கை நழுவி போனது. அதோடு அவரின் அடையாளமான 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் 6-வது பாகத்தில் இருந்தும், 'பென்டாஸ்டிக் பீஸ்ட்ஸ் 3' படங்களில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

“நாயகன் மீண்டும் வரான்..” : மன்னிப்புக் கேட்ட Walt Disney - கேப்டனாக வருகிறார் ஜாக் ஸ்பாரோ!

இதையடுத்து தனக்கு பட வாய்ப்புகள் வராததற்கு காரணம் ஆம்பர் ஹெர்ட்தான் என்று அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அதுமட்டுமின்றி, தனது மனைவி தன்னை தினமும் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும், கைகளில் சூடு வைத்ததாகவும் நீதிமன்றத்தில் முறையிட்டார். அண்மையில் நடைபெற்ற ஜானி டெப் - ஆம்பர் ஹெர்ட் வழக்கின் தீர்ப்பு ஜானி டெப்புக்கு சாதகமாக அமைந்தது. மேலும் ஜானி டெப்புக்கு இழப்பீடாக ஆம்பர் ஹெர்ட் 15 மில்லியன் டாலர்கள் கொடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மீண்டும் ஜானி டெப்புக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமாக காணப்பட்டது.

“நாயகன் மீண்டும் வரான்..” : மன்னிப்புக் கேட்ட Walt Disney - கேப்டனாக வருகிறார் ஜாக் ஸ்பாரோ!

இதைத்தொடர்ந்து மீண்டும் 'ஜாக் ஸ்பரோ'-வாக ஜானி டெப் வருவாரா என்று ரசிகர்கள் பெருதும் எதிர்நோக்கி காத்திருந்த நிலையில், எந்த படங்களில் வேண்டுமானாலும் தான் நடிப்பேன், ஆனால் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். ஏனென்றால், தான் ஒரு இக்கட்டான நிலைமையில் இருக்கும்போது, தன்னை Disney கைவிட்டதாகவும், இதனால் பல்லாயிர கோடிக்கணக்கில் பணம் கொடுத்தாலும் தான் அதில் நடிக்க மாட்டேன் என்றும் உறுதியாக தெரிவித்தார்.

ஆனால் தற்போது ஜானி டெப் மீண்டும் கேப்டன் ஜாக் ஸ்பரோவாக-வாக நடிக்க Disney நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காக டிஸ்னி நிறுவனம் ஜானி டெப்பிடம் மன்னிப்பு கோரி கடிதம் எழுதியதோடு, அடுத்த பாகத்தில் நடிக்கக் கிட்டத்தட்ட 301 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் 2,535 கோடி) அளவுக்கு டீலிங் நடைபெற்றுள்ளதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு ஆன்லைன் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

“நாயகன் மீண்டும் வரான்..” : மன்னிப்புக் கேட்ட Walt Disney - கேப்டனாக வருகிறார் ஜாக் ஸ்பாரோ!

இதற்கு முன்னர், ஜானி "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால்கூட டிஸ்னியின் 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இப்படி ஒரு செய்தி வெளியாகி வைரலாகி வருகிறது. இது குறித்த உண்மைத்தகவலை டிஸ்னி மற்றும் ஜானி டெப் ஆகிய இருவரும் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எது என்னவானாலும் சரி, மறுபடியும் ஜானி டெப் 'ஜாக்ஸ்பரோ' சினிமா துறையில் ரீ-என்ட்ரி கொடுப்பார் என்று அவரது ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories