சினிமா

ஒரு மாதமாகப் படுத்த படுக்கை.. பிரபல நடன இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை!

300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இருந்த சின்னா உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

ஒரு மாதமாகப் படுத்த படுக்கை.. பிரபல நடன இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் அஜித்குமார், பாக்கியராஜ்,விஜயகாந்த் என பல முன்னணி நடிகர்களுக்கு நடனமாட கற்றுக் கொடுத்தவர் என்றால் அது நடன இயக்குநர் சின்னாதான்.

தமிழ் சினிமாவில், 300க்கும் மேற்பட்ட படங்களுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். தற்போது சினிமாவில் எத்தனையோ நடன இயக்குநர்கள் இருந்தாலும் ஆரம்பத்தில் கொடிகட்டிப் பரந்த நடின இயக்குநரான இருந்தவர் சின்னா மட்டுமே.

ஒரு மாதமாகப் படுத்த படுக்கை.. பிரபல நடன இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை!

பாக்கியராஜுன் முந்தானை முடிச்சு, அஜித்குமாரின் முதல் படமான அமராவதி, விஜயகாந்தின் செந்தூர பாண்டி என பல முன்னணி நடிகர்களுக்கு ஏற்ப நடனம் கற்றுக் கொடுப்பதில் வல்லவராக இருந்துள்ளார்.

இவர் கடைசியாக ஆனந்தம் படத்தில் புல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலுக்கு நடன இயக்குநராக இருந்துள்ளார். இதையடுத்து வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெற்று வந்துள்ளார்.

ஒரு மாதமாகப் படுத்த படுக்கை.. பிரபல நடன இயக்குநருக்கு நேர்ந்த கொடுமை!

இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அவருக்குக் கைகால் செயல் இழந்து நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிரபல நடன இயக்குநர் சின்னா உயிரிழந்தது திரைக் கலைஞர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories