சினிமா

மீண்டும் BIKE RIDE தொடங்கிய அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: இம்முறை எங்கு தெரியுமா?

நடிகர் அஜித் மீண்டும் பைக் ரைட் சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீண்டும் BIKE RIDE தொடங்கிய அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: இம்முறை எங்கு தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் அஜித், தனது நடிப்பு திறமை மட்டுமின்றி, குணாதிசயங்களாலும் பெருவாரியான ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், இவரது நடிப்பில் அண்மையில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.

இதனையடுத்து பெயரிடப்படாத திரைப்படமான அஜித்தின் 61 ஆவது படமான 'AK61'-ல் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. இதன் படப்பிடிப்புகளும் சமீபத்தில் தொடங்கி ஐதராபாத், புனே என பல இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மீண்டும் BIKE RIDE தொடங்கிய அஜித்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்: இம்முறை எங்கு தெரியுமா?

இந்நிலையில், இந்த படப்பிடிப்பிற்கு சிறிது காலம் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் நடிகர் அஜித் நடிப்பில் மட்டும் ஆர்வம் இருப்பவராக இல்லாமல், அவருக்கு BIKE RIDE-லும் ஆர்வம் காட்டுபவராக திகழ்ந்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான 'மங்காத்தா' திரைப்படத்தில், தனது திறமையை பயன்படுத்தி bike stunt செய்த காட்சி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. எனவே இதன் பிறகு வெளியான அனைத்து படங்களிலும் ரசிகர்களுக்காகவே bike stunt காட்சிகள் இடம்பெற்றன.

அது மட்டுமின்றி, கடந்த சில வருடங்களாக பைக்கில் உலகத்தை சுற்ற முடிவு செய்த அஜித், தற்போது தனது சுற்றுலாவை தொடங்கியுள்ளார். கடந்த ஆண்டும் இதே போல் வலிமை படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த சமயத்தில் 'சிக்கிம்' வரை பைக் ரைட் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

அதுபோல் தற்போது மீண்டும் தனது பைக் ரைட்-ஐ தொடங்கியுள்ளார் அஜித். அதன்படி இந்த முறை UK, Europe போன்ற இடங்களில் பைக்கில் பறக்க புறப்பட்டுள்ளார். இது தொடர்பாக லண்டனில் bike ride குழுக்களுடன் அஜித் இருக்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது. Euro Tunnel இரயிலில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories