சினிமா

வெளியானது Money Heist கொரியன் டீசர்.. மீண்டும் தொடங்கியது Professor -ன் அதிரடி Twist!

Money Heist கொரியன் ரீமேக் டீசர் வெளியாகி ரசிர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது

வெளியானது Money Heist கொரியன் டீசர்.. மீண்டும் தொடங்கியது Professor -ன் அதிரடி Twist!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Netflix -ல் வெளியான ஸ்பானிஷ் வெப் சீரிஸான Money Heist-க்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தத் தொடரின் முதல் சீசன் 2017ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி வெளியானது.

ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் Money Heist என்ற தொடர் ஒன்று இருப்பதே கொரோனா காலகட்டத்தில்தான் தெரியும். வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு பெரிய விருந்தாக அமைந்தது.

ஐந்து சீசன்களை கொண்ட இந்தத் தொடரின் கடைசிப்பகுதி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துவந்த இந்த தொடருக்கு ஒரு முடிவு வந்து விட்டதால், வேறு தொடர்களைப் பார்க்க ரசிகர்கள் சென்று விட்டனர்.

இதையடுத்து Netflix, Money Heist தொடரை கொரியன் மொழியில் ரீமேக் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டது. இதில் இருந்தே கொரியன் Money Heist-க்குக்காக அதன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

பின்னர் Money Heist தொடரின் நாயகர்களான புரொஃபசர்,பெர்லின்,டோக்கியோ. ரியோ, நைரோபி உள்ளிட்டோரின் கதாபாத்திரத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பையும் Netflix வெளியிட்டது. இது இன்னும் அந்த தொடர் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், Money Heist கொரியன் ரீமேக் டீசர் வெளியாகி ரசிர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. ஜூன் 24 ஆம் தேதி கொரியன் மொழியில் Money Heist வெளியாகிறது.

banner

Related Stories

Related Stories