சினிமா

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் ஆவலுக்கு தீனி போட்ட அயலான் படக்குழு.. ரிலீஸ் தேதி எப்போது?

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் ஆவலுக்கு தீனி போட்ட அயலான் படக்குழு.. ரிலீஸ் தேதி எப்போது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் 100 கோடி ரூபாய் வசூலை குவிக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன்.

இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டான் படத்தை காண திரையரங்குகளில் மக்கள் ஆரவாரமாக குவிந்து வருகிறார்கள்.

தொடர்ந்து வெற்றிப்படமாக சிவகார்த்திகேயன் கொடுத்து வந்தாலும் அவரது நடிப்பில் உருவாகி வரும் அயலான் திரைப்படம் எப்பொது திரைக்கு வரும் என்பதே ரசிகர்களின் முதன்மையான எதிர்ப்பார்ப்பாக இருந்து வருகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களின் நீண்ட நாள் ஆவலுக்கு தீனி போட்ட அயலான் படக்குழு.. ரிலீஸ் தேதி எப்போது?

2020ம் ஆண்டுக்கு முன்பே படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கும், 2021ல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான வேற லெவல் சகோ சிங்கிள் பாடலும் வெளியிடப்பட்டு ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருந்த அயலான் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வரும் என ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அந்த எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அயலான் ரிலீஸ் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் நடிக்கும் இந்த படம் எதிர்வரும் கிறிஸ்துமஸ் அல்லது ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த தகவல் இதுவரையில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

banner

Related Stories

Related Stories