சினிமா

’நிஜமாவே இது குடும்பங்கள் கொண்டாடும் படம்தான்..’ - டான் படத்துக்கு குவியும் பாசிடிவ் ரிவ்யூஸ்!

அங்காங்கே திரைக்கதையில் சற்று தொய்வாக இருந்தாலும் மொத்தத்தில் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது.

’நிஜமாவே இது குடும்பங்கள் கொண்டாடும் படம்தான்..’ - டான் படத்துக்கு குவியும் பாசிடிவ் ரிவ்யூஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லைகா மற்றும் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் ‘டான்’ படம் நீண்ட நாள் காத்திருப்புக்கு பிறகு இன்று திரையரங்குகளில் ரிலீசாகியிருக்கிரது,

சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்த படத்தில் பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி, ஆர்.ஜே.விஜய், பால சரவணன், ஷிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையிலான ஜலபுல ஜங்கு பாடலுக்கு பட்டித்தொட்டியெங்கும் வரவேற்பு ஏற்கெனவே கிடைத்திருந்தது.

படத்தின் டீசர், ட்ரெய்லர் வெளியானதே சாதாரணமான படமாகத்தான் இருக்கப் போகிறது என்று பற்றில்லாமல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தே கொடுத்திருக்கிறது என்பதே நெட்டிசன்களின் பதிவுகளின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.

சமூக வலைதளங்களுக்குள் சென்றாலே டான் படம் குறித்து ரசிகர்கள் பலரும் ஆஹோ ஓஹோ என பாராட்டு மழையை பொழிந்து வருகிறார்கள்.

கல்லூரி, பள்ளி காலத்தில் கடைசி பென்ச் மாணவர்கள் செய்யும் அட்டகாசங்களையும், அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள் என அனைத்தையும் நகைச்சுவையுடன் கலந்து உணர்வுப்பூர்வமாக சிவகார்த்திகேயனின் டான் கொடுத்திருக்கிறது என சிலாகித்து வருகிறார்கள்.

மேலும் சிபி சக்கரவர்த்தியின் இயக்கமும், சிவகார்த்திகேயனின் நடிப்பும் பிரமாதமாக இருந்திருப்பதாகவும், அங்காங்கே திரைகதையில் சற்று தொய்வாக இருந்தாலும் மொத்தத்தில் ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories