சினிமா

SK21 படத்தின் டைட்டில் இதுவா? - படையப்பா படத்தில் தவறான கருத்துகள் - RJ பாலாஜி: இது 5IN1_CINEMAS துளிகள்!

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைப்பெற்றது.

sivakarthikeyan
google sivakarthikeyan
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

1) சிவகார்த்திகேயனின் 'எஸ்.கே 21' படத்தின் டைட்டில் இதுவா?

சிவகார்த்திகேயன் நடித்த ’டான்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ள நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் உள்ளது.

இதனை தொடர்ந்து உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்திற்கு ‘மாவீரன்’ என்ற டைட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளார்.

2) 'மன்னன்' 'படையப்பா' படங்களில் தவறான கருத்துகள்: ஆர்.ஜே.பாலாஜி

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான ’வீட்ல விசேஷங்க’ என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு நேற்று நடைப்பெற்றது. இதில் பேசிய ஆர்.ஜே. பாலாஜி ரஜினி நடித்த மன்னன் மற்றும் படையப்பா ஆகிய படங்களில் விஜயசாந்தி, ரம்யா கிருஷ்ணன் ஆகியோரின் கேரக்டர்களின் மூலம் தவறான எடுத்துக்காட்டை இந்த சமூகத்திற்கு கூறியுள்ளதாகவும், அடுத்த தலைமுறையாவது பெண்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

3) கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியான ‘வேட்டுவம்’ பட போஸ்டர்!

சார்பட்டா பரம்பரை படத்தை தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது மற்றும் விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாகவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் மற்றொரு புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது. ‘வேட்டுவம்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியிட்டுள்ளனர்.

4) பிறந்தநாள் பரிசாக ஜூனியர் என்.டி.ஆருக்கு டபுள் ட்ரீட்...

தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடையாக வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றதை தொடர்ந்து அவரின் அடுத்த படங்களிந் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் அவரின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவரின் 30 மற்றும் 31 வது படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

5) 100 வது நாளை எட்டிய விக்ரமின் மகான்.!

விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 10ல் அமேசான் ப்ரைமில் வெளியான படம் மகான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருந்தது. கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதும் விக்ரமின் ஸ்க்ரீன் பிரசன்ஸ் அவரது ரசிகர்களிடையே ரசிக்கச் செய்திருந்தது. தற்போது படம் வெளியாகி 100வது நாளை சிறப்பிக்கும் வகையில் மகான் படத்தின் 3 நீக்கப்பட்ட காட்சியும், சூரயாட்டம் வீடியோ பாடல், மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories