சினிமா

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி?.. கார்த்தி படத்தில் இணைந்த ரவிவர்மன்! #5IN1_CINEMA

4 வருடங்களாக ஷாருக் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் அடுத்த ஜனவரி மாதம் ‘பதான்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி?.. கார்த்தி படத்தில் இணைந்த ரவிவர்மன்! #5IN1_CINEMA
SPOT RIGHT
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1.திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் எப்போது!

யாரடி நீ மோகினி, குட்டி, உத்தம புத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - மித்ரன் ஜவகர் கூட்டணியில் உருவாகிவரும் திரைப்படம் ‘திருச்சிற்றம்பலம்’. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷ் - அனிருத் இணைந்திருப்பது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. படத்தின் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் படத்தை ஜூலை 1ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் இந்த படத்தை வெளியிட உள்ளனர்.

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி?.. கார்த்தி படத்தில் இணைந்த ரவிவர்மன்! #5IN1_CINEMA

2. கார்த்தி படத்திற்கு ஒளிப்பதிவாளராகும் ரவிவர்மன்!

அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்து வரும் நடிகர் கார்த்திக்கு பொன்னியின் செல்வன், சர்தார், விருமன் என படங்கள் வரிசைக்கட்டி நிற்க புதியதாக் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படம் கார்த்தியின் 24வது திரைப்படமாகும். இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் அடுத்த மாதம் துவங்கும் என கூறப்படுகிறது.

3. குலு குலு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மேயாத மான், ஆடை படங்களை இயக்கிய ரத்னகுமார் இயக்கத்தில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் திரைப்படம் ‘குலு குலு’. சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகிவிட்ட நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதன்படி படம் வரும் ஜூன் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் டீஸர் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திருச்சிற்றம்பலம் படத்தின் ரிலீஸ் தேதி?.. கார்த்தி படத்தில் இணைந்த ரவிவர்மன்! #5IN1_CINEMA

4. மினி மினி படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு!

`பூவரசம் பீப்பி', `சில்லுக் கருப்பட்டி', `ஏலேய்', அமேஸான் ப்ரைமில் வந்த `லோனர்ஸ்' போன்ற படங்களை இயக்கியவர் ஹலீதா ஷமீம். இவரின் இரண்டாவது படமாக `மின்மினி' படத்தைத் துவங்கினார். இது ஒரு Coming of age வகைப் படம் என்பதால், படத்தின் முதல்பாதியில் அதில் நடிக்கும் சிறுவர்களின் பள்ளிப்பருவமும், இரண்டாம் பாதி அவர்கள் வளர்ந்த பின்பு படமாக்குவதாகவும் திட்டமிட்டிருந்தார். தற்போது இந்த ஆறு வருடங்களில் அந்த நடிகர்கள் கதைக்குத் தகுந்தது போல் வளர்ந்துவிட்டதால், அடுத்தகட்ட படப்பிடிப்பை ஜூன் மாதம் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளார் ஹலீதா.

5. ஷாருக்கானின் டன்கி பட ஷூட்டிங் துவங்கியது!

கடந்த 4 வருடங்களாக ஷாருக் நடிப்பில் எந்த படமும் வெளியாகாத நிலையில் அடுத்த ஜனவரி மாதம் ‘பதான்’ படம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து அட்லி இயக்கத்தில் நடித்துவரும் ஷாருக்கான் ராஜ் குமார் ஹிரானி இயக்கத்திலும் ஒரு படம் நடிக்கின்றார். ‘டன்கி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளது. அடுத்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories