சினிமா

‘தளபதி 66’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபல நடிகர்கள் - அதிகாரபூர்வ பட்டியல் இதோ ! #Vijay66CastList

விஜய் 66 படத்தில் நடிகையான ஜெயசுதா, நடிகர்கள் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜும் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மேலும் 4 பிரபல நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது படக்குழு!

‘தளபதி 66’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபல நடிகர்கள் - அதிகாரபூர்வ பட்டியல் இதோ ! #Vijay66CastList
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பீஸ்ட் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தில் ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் இருக்கும் கூடவே குடும்ப எமோஷ்னல் விஷயங்களும் கலந்து நல்ல ஹார்ட் டச்சிங் படமாக இருக்கும் என தயாரிப்பாளர் கூறியுள்ளார். படத்தின் கதைக்களம் பற்றி தயாரிப்பாளர் வெளிப்படையாக கூறியுள்ளதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

இதனையடுத்து படத்துக்கான பூஜைகள் போடப்பட்டு படபிடிப்பு பணிகள் ஜோராக நடைபெற்று வரும் நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள முக்கியமான நட்சத்திரங்கள் குறித்த விவரங்களை நேற்றைய தினம் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

முன்னதாக சரத்குமார் விஜய் 66ல் நடிப்பது உறுதியான நிலையில், நேற்று வெளியிட்ட அறிவிப்பில், பழம்பெறும் நடிகையான ஜெயசுதா, நடிகர்கள் பிரபு மற்றும் பிரகாஷ் ராஜும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘தளபதி 66’ படத்தில் இணைந்த மேலும் 4 பிரபல நடிகர்கள் - அதிகாரபூர்வ பட்டியல் இதோ ! #Vijay66CastList

அதனைத் தொடர்ந்து இன்று வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், நடிகை சங்கீதா, நடிகர் ஷ்யாம், நடிகர் யோகி பாபு, பிக்பாஸ் சம்யுக்தா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மேகா ஆகியோர் உள்ளனர். சினிமா உலகின் மூத்த நட்சத்திரங்கள் பலரும் இதில் இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் அதிகரித்துள்ளது.

இப்படி இருக்கையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜய் 66 வெளியாக இருப்பதாகவும் தயாரிப்பு நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே படத்தில் மூத்த நட்சத்திரங்கள் பலரும் இணைந்திருப்பது குறித்து படம் உருவாகும் முன்னரே குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக விஜய் 66 இருக்கப் போகிறதா எனவும் நெட்டிசன்கள் தரப்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

banner

Related Stories

Related Stories