சினிமா

பன்மொழி ரிலீஸுக்கு தயாராகும் ஹீரோக்களை அடுத்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்.. சினிமா துளிகள்!

பன்மொழி ரிலீஸுக்கு தயாராகும்  ஹீரோக்களை அடுத்து ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள்.. சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெளியானது அரபிக் குத்து வீடியோ பாடல்!

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வெளியான படம் `பீஸ்ட்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், விமர்சகர்களிடமிருந்து கலவையான கருத்துகளையே பெற்றது. ஆனாலும், இப்படத்தின் பாடல்கள் பெரிய அளவில் வரவேற்கப்பட்டது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திலிருந்து ஏற்கெனவே ஜாலியோ ஜிம்கானா பாடலின் வீடியோ வெளியானது. தற்போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட `அரபிக் குத்து' பாடலின் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

வெளியானது உதயநியின் `நெஞ்சுக்கு நீதி' பட டிரெய்லர்!

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ள படம் `நெஞ்சுக்கு நீதி'. இது இந்தியில் 2019ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்ப பெற்ற படம் ‘ஆர்டிகள் 15’ படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக். இதில் உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிசந்திரன், ஷிவானி, மயில்சாமி எனப் பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் இப்படத்தை தயாரித்திருக்கிறார். மே 20ம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், தற்போது படத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லரை வெளியிட்டுள்ளனர்.

சாய் பல்லவி நடிப்பில் மூன்று மொழிகளில் உருவாகும் `கார்கி'

நிவின் பாலி நடித்த `ரிச்சி' படம் மூலமாக இயக்குநராய் அறிமுகமானவர் கௌதம் ராமசந்திரன். இப்போது இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `கார்கி'.

இதில் சாய் பல்லவி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இன்று சாய் பல்லவியின் பிறந்தநாள் என்பதால், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும், க்ளிம்ப்ஸ் வீடியோவையும் ரிலீஸ் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது இப்படம்.

துல்கர் சல்மானின் `சீதா ராமம்' படப் பாடல்!

துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் ஹனு ராகவப்புடி இயக்கியிருக்கும் படம் `சீதா ராமம்'. போர் பின்னணியில் நடக்கும் ஒரு காதல் கதையாக உருவாகியுள்ளது இப்படம். தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்துக்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்திலிருந்து `ஹே சீதா' என்ற லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.

நடிகர் ஜெயராமின் மகள் நடித்துள்ள மியூசிக் வீடியோ!

மலையாள சினிமாவின் பன்முக நடிகர்களில் ஒருவர் ஜெயராம். தமிழ், தெலுங்கு என பிற மொழி சினிமாக்களிலும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் மகன் காளிதாஸ் ஜெயராமும் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இவரின் மகள் மாளவிகா ஜெயராமும் விரைவில் சினிமாவில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது அவர் நடிகர் அசோக் செல்வனுடன் இணைந்து `மாயம் செய்தாயோ பூவே' என்ற ம்யூசிக் வீடியோவில் நடித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories