சினிமா

சினி துளிகள் : அன்னையர் தின ஸ்பெஷலாக KGF-2 டீம் வெளியிட்ட அகிலம் நீ பாடல் வீடியோ..!

சினி துளிகள் : அன்னையர் தின ஸ்பெஷலாக KGF-2 டீம் வெளியிட்ட அகிலம் நீ பாடல் வீடியோ..!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்ரம் பட முதல் சிங்கிள் ரிலீஸ் தேதி

கமல் நடிப்பில் ரிலீஸூக்குத் தயாராகிவரும் படம் `விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன் ஆகியோரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் ஜூன் 3ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

வரும் மே 18ம் தேதி பிரான்ஸில் நடைபெற உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் டிரெய்லரை வெளியிட உள்ளனர். அதற்கு முன்பாக மே 15ம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் இணையத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிள் மே 11ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

`சர்காரு வாரி பாட்டா' பட புது பாடல் ரிலீஸ்

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் வரும் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், நதியா ஆகியோர் நடித்துள்ளனர். கீதா கோவிந்தம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்திலிருந்து ‘மா மகேஷா’ எனும் பாடல் வெளியாகியுள்ளது.

லிங்குசாமி இயக்கும் தி வாரியர்

’சண்டக்கோழி 2’ படத்திற்குப் பின்னர் ராம் பொத்தினேனி நடிப்பில் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தினை இயக்கி முடித்துள்ளார் லிங்குசாமி.

நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஆதி வில்லனாகவும், பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீஸர் வீடியோவானது மே 14ஆம் தேதி மாலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தி வாரியர் படமானது ஜூலை 14ஆம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி 169 படத்தில் சிவராஜ்குமார்

விஜய் நடிக்க பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் அடுத்தக் கட்டமான நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறர். நடிகர் ரஜினியின் 169வது படமாக உருவாகிவரும் இப்படத்தினை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய ரோலில் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. விரைவிலேயே படம் குறித்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

`டாணாக்காரன்' படத்தின் பாடல் வெளியீடு அறிவிப்பு

அசுரன், ஜெய்பீம் படங்களில் நடிகராஜ கவனம் ஈர்த்தவர் தமிழரசன். இவர் இயக்குநராக அறிமுகமாகும் படம் `டாணாக்காரன்'. விக்ரம் பிரபு, லால், அஞ்சலி நாயர் எனப் பலரும் நடித்திருக்கும் இந்தப் படம் ஹாட்ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திலிருந்து `கட்டிக்கோடா' என்ற பாடல்ஆனது பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது, இப்பாடலின் வீடியோவானது மே 9ஆம் தேதி மாலை வெளியாகிறது.

கே.ஜி.எஃப் 2 படத்தின் அகிலம் நீ பாடல் ரிலீஸ்

கடந்த 2018 ஆம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் ஹீரோவாக நடித்து வெளியான படம் 'கேஜிஎஃப்'. இப்படத்தின் முதல் பாகம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இப்படத்திற்குக் கிடைத்த மாபெரும் வரவேற்பைத் தொடர்ந்து, அப்படத்தின் இரண்டாம் பாகம் கடந்த மாதம் ஏப்ரல் 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார். படம் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அன்னையர் தினத்தையொட்டி, இன்று 'கேஜிஎஃப்-2' படத்தின் 'அகிலம் நீ, முகிலும், நீ சிகரம் நீ' என தொடங்கும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories