சினிமா

அஜித்துக்கு வில்லனாகும் வேம்புலி.. வெளியானது AK61 அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்!

அஜித்துக்கு வில்லனாகும் வேம்புலி.. வெளியானது AK61 அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. அஜித்துக்கு வில்லனாகும் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகர்

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஜிப்ரான் இசையில் இந்த படத்தின் பாடல்கள் உருவாகி வருகிறது. இப்படத்தில் நிரவ் ஷா ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். கல்லூரி பேராசிரியராக அஜித் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் மவுண்ட் ரோடு போன்று செட் ஒன்றும் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக ‘சார்பட்டா பரம்பரை' படத்தில் வேம்புலி கதாப்பாத்திரத்தில் வில்லனாக நடித்த ஜான் கொக்கன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2. காஜல் அகர்வால் நெகிழ்ச்சி பதிவு

தொழில் அதிபர் கவுதம் கிச்சலுவை கடந்தாண்டு காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை காஜல் அகர்வால், திருமணத்துக்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது இவர் கைவசம் பல படங்கள் உள்ளன. சமீபத்தில் , காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அன்னையர் தினத்தையொட்டி நடிகை காஜல் அகர்வால் தனது மகனுடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து அதில் சில விஷயங்களை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

அதில், "வரும் காலங்களில் நிறைய விஷயங்களில் ஒரு தாயாக உனக்கு நான் கற்றுத்தரவுள்ளேன். ஆனால் நீ எனக்கு ஏற்கனவே நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து விட்டாய். குறிப்பாக தாயாக இருப்பது என்ன என்பதை நீ எனக்கு கற்றுத்தந்துள்ளாய். என் சிறிய இளவரசனே, நீ என் சூரியன், என் சந்திரன், என் நட்சத்திரங்கள் அனைத்தும் நீங்கள்தான். அதை என்றும் மறந்து விடாதீர்கள் என்று நீண்ட பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு சமூக வலைத்தளத்தில் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

3. நயன்தாராவின் அடுத்தப் படம்

நயன்தாரா நடித்து முடித்திருக்கும் படம் ‘ஓ-2’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. விக்னேஷ் என்பவர் இயக்கி இருக்கும் இந்தப் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட இருக்கிறார்கள். சமீபத்தில் கொரோனாவால் ஆக்சிஜன் என்பது எவ்வளவு அவசியம் என்பதை அனைவரும் தெரிந்து கொண்டோம். அதை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தை விக்னேஷ் என்பவர் இயக்கியுள்ளார்.

தமிழ்நாடு, கேரளா இணையும் மலைப்பகுதியில் இக்கதை நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது.” இந்த படத்தில் 8 வயது மகனின் அம்மாவாக நயன்தாரா நடித்திருக்கிறாராம்.

4. வெளியான விருமன் பட சிங்கிள்

குட்டிப் புலி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் முத்தையா. இதையடுத்து அவர் இயக்கிய கொம்பன், மருது, தேவராட்டம், புலிக்குத்தி பாண்டி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் இயக்கத்தில் தற்போது ‘விருமன்’ படம் தயாராகி வருகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை நடிகர் சூர்யா தனது 2டி நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்தப் படத்திலிருந்து, “கஞ்சா பூ கண்ணாலே” என்னும் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது. இதனை சூர்யா தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, விருமா கலக்குது என்றும் திரைத்துறையில் 25 வருடத்தை கடக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கு வாழ்த்தும் கூறி பகிர்ந்துள்ளார்.

5. `கூகுள் குட்டப்பா' பட பாடல் வெளியானது!

மலையாளத்தில் வெளியான `ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்' படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ளது `கூகுள் குட்டப்பா'. இந்தப் படத்தை தயாரித்து முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார் கே.எஸ்.ரவிக்குமார். இவருடன் தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு, ப்ராங்க்ஸ்டர் ராகுல் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். சபரி - சரவணன் என்ற இரட்டை இயக்குநர்கள் இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். மே 6ம் தேதி இந்தப் படம் வெளியான நிலையில், தற்போது படத்திலிருந்து `சூரத்தேங்கா' என்ற பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories