சினிமா

KGF திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!

KGF படத்தில் நடித்த மோகன் ஜுனேஜா உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ளார்.

KGF திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த நடிகர் திடீர் மரணம் : ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரசாந்த் நீல் கன்னடத்தில் இயக்கிய KGF படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

KGF Chapter 1 இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைவிட 'KGF: Chapter 2' ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரைகளில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1,000 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் வரும் 'அவன் கேங்ஸ்டர் இல்ல மான்ஸ்டர்' என்ற பேமஸ் வசனத்தைப் பேசிய நடிகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் மோகன் ஜுனேஜா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலமில்லாமல் போனதால் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். மோகன் ஜுனேஜாவின் மறைவு கன்னட திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories