சினிமா

“ரூ.1,000 கோடி நாட் அவுட்” : அதிரவிட்ட KGF-2 : கன்னட சினிமாவில் புதிய சரித்திரம் எழுதிய பிரசாந்த் நீல்!

KGF Chapter 2 தற்போது வரை ரூ.1,000 கோடி வரை வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“ரூ.1,000 கோடி நாட் அவுட்” : அதிரவிட்ட KGF-2 : கன்னட சினிமாவில் புதிய சரித்திரம் எழுதிய பிரசாந்த் நீல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரசாந்த் நீல் கன்னடத்தில் இயக்கிய KGF படம் இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

KGF Chapter 1 இந்தியா முழுவதும் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து அடுத்த பாகமான 'KGF: Chapter 2' ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்புக்கிடையே கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி ரிலீஸானது.

இந்தப் படம் உலகம் முழுவதும் சுமார் 10,000 திரைகளில் வெளியாகி ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது வரை ரூ.1,000 கோடி வரை வசூல் குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

“ரூ.1,000 கோடி நாட் அவுட்” : அதிரவிட்ட KGF-2 : கன்னட சினிமாவில் புதிய சரித்திரம் எழுதிய பிரசாந்த் நீல்!

இந்நிலையில் இந்தியில் பாக்ஸ் ஆஃபீஸ் புள்ளிவிவரங்களை வெளியிடும் தரன் ஆதர்ஷ் என்பவர் இதுவரை கேஜிஎஃப்-2, இந்தியில் மட்டுமே 348 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளார். இதை கேஜிஎஃப் 2 தயாரிப்பு நிறுவனம் Re-Tweet செய்துள்ளது.

மேலும், ட்ரேட் அனலிஸ்ட் ஹிமேஷ் மான்கண்ட், “1000 நாட் அவுட்! #KGFChapter2 உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடி கிளப்பைத் தாண்டியுள்ளது. டங்கல், பாகுபலி 2, RRR படங்களுக்குப் பிறகு இந்த சாதனையை எட்டிய நான்காவது இந்தியப் படமாக கே.ஜி.எஃப் 2 உள்ளது. 1,000 கோடி வசூலைக் கடந்த முதல் கன்னடத் திரைப்படம் இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories