சினிமா

முடிந்தது ’நிறங்கள் மூன்று’.. சோலோ நாயகியாக களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. வெளியானது விட்னஸ் போஸ்டர்!

முடிந்தது ’நிறங்கள் மூன்று’.. சோலோ நாயகியாக களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. வெளியானது விட்னஸ் போஸ்டர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

‘ஃபெண்டாஸ்டிக் ஃபோர்’ படத்தில் இருந்து விலகிய இயக்குநர்...

மார்வெல் ஸ்டூடியோ தயாரிப்பில் உருவாகிவரும் பல படங்களில் ஒன்று தான் ‘ஃபெண்டாஸ்டி ஃபோர்’. காமிக்கானில் மார்வெல் அறிவித்த படங்களில் அதிகப்படியான ரசிகளின் ஆவலை தூண்டிய இந்த படத்தை இயக்க ஜான் வாட்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், கொரோனாவால் படத்தின் ஷூட்டிங் வேலைகளை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் ஜான் வாட்ஸின் மற்ற படங்களின் வேலைகளும் பாதிக்கப்படுவதால் இந்த படத்தின் இயக்குநர் பொருப்பில் இருந்து அவர் விலகிக் கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதர்வாவின் ‘நிறங்கள் மூன்று’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்...

நடிகர் அதர்வா நடிப்பில் அடுத்தடுத்து குருதி ஆட்டம், அட்ரஸ், ட்ரிக்கர், ஒத்தைக்கு ஒத்த ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கிறது. இந்த வரிசையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா நடித்துள்ள ‘நிறங்கள் மூன்று’ திரைப்படமும் இணையவுள்ளது.

இந்த படத்தில் அதர்வாவுடன் சரத்குமார், ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடந்து வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் பணிகள் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகிவரும் ‘விட்னஸ்’ படத்தின் போஸ்டர் வெளியானது...

கன்னட படமான ‘யு டர்ன்’ மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். தமிழில் விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை போன்ற படங்களில் நடித்துள்ள இவர் சோலோ நாயகியாக நடித்து வரும் படம் ‘விட்னஸ்’.

முடிந்தது ’நிறங்கள் மூன்று’.. சோலோ நாயகியாக களமிறங்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. வெளியானது விட்னஸ் போஸ்டர்!

தீபக் இயக்கத்தில் உருவாகிவரும் இந்த படத்தில் நடிகை ரோகினியும் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படம் மனித கழிவுகளை அகற்றும் மனிதகளை பற்றிய கதையாக புதியதொரு பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ராதிகாவின் தயாரிப்பில் நடிக்கவிருக்கும் முன்னணி தெலுங்கு நடிகர்..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் ‘ஆச்சார்யா’ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சிரஞ்சீவியுடன் அவரது மகன் ராம் சரண் நடித்திருக்கும் இந்த படத்தை கொரட்டலா சிவா இயக்கிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி நடிப்பில் காட் ஃபாதர், போலா ஷங்கர் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதனை தொடர்ந்து நடிகை ராதிகா சரத்குமாரின் ராடன் மீடியா நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சிரஞ்சீவி. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ராதிக ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். விரைவில் படம் பற்றிய மற்ற தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘777 சார்லி’ படத்தின் ரிலீஸ் தேதி

கிரண்ராஜ் இயக்கத்தில் கன்னட மொழியில் ஒரு நாயை மையமாக வைத்து உருவாகிருக்கும் படம் ‘777 சார்லி’. இதில் ராக்‌ஷித் ஷெட்டி லீட் ரோலில் நடித்துள்ளார்.

5 மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த படத்தை வரும் ஜூன் 10ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தின் தெலுங்கு ரிலீஸ் உரிமையை நடிகர் ராணா டகுபதி வாங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த படத்தை பார்த்த நடிகர் ராணா படம் பற்றிய தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories