சினிமா

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ‘கில்லி’ கூட்டணி - இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!

‘கில்லி’ படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் ஆகியோர் சந்திக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ‘கில்லி’ கூட்டணி - இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘கில்லி’. இந்தப் படத்தில், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஆசிஷ் வித்யார்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இந்தப் படம் வெளியாகி வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல பெயரைப் பெற்றிருந்தது. எப்போது பார்த்தாலும் சலிக்காத திரைப்படங்கள் வரிசையில் கில்லி திரைப்படத்திற்கும் ஒரு இடம் உண்டு. மேலும், கில்லி திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்கிறது.

இந்நிலையில், அப்படத்தில் நடிகர் விஜய்க்கு அப்பாவாக நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அம்மாவாக நடித்த நடிகை ஜானகி சபேஷ் ஆகிய இருவரும் சென்னை கடற்கரையில் சந்திக்கொண்ட சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த ‘கில்லி’ கூட்டணி - இணையத்தில் வைரலான புகைப்படங்கள்!

மேலும் இதுதொடர்பாக வெளியான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதேவேளையில் படம் வெளியாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், ரசிகர் பலரும் அந்த கதாபாத்திரத்தை பாராட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை ஜானகி சபேஷ் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories