சினிமா

அடுத்தடுத்து போலிஸில் சிக்கும் தெலுங்கு சினிமா ஹீரோக்கள் : பாகுபலிக்கு நேர்ந்த சம்பவம்!

போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டதாக கூறி நடிகர் பிரபாஸ்க்கு ரூ.1450 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்தடுத்து போலிஸில் சிக்கும் தெலுங்கு சினிமா ஹீரோக்கள் : பாகுபலிக்கு நேர்ந்த சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைதராபாத் போலிஸார் அண்மையில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த Toyota Vellfire கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததை போலிஸார் கவனித்துள்ளனர். பிறகு உடனே அந்த காரை நிறுத்தியுள்ளனர்.

அப்போது காரில் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யா இருந்துள்ளார். இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறி கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளதாக போலிஸார் அவரிடம் கூறியுள்ளனர். இதையடுத்து, நாக சைதனையா கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கரை நீக்குவதாக கூறியுள்ளார்.

பிறகு போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி அவருக்கு ரூ.750 அபராதம் விதிப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து மூன்று நாட்கள் கூட ஆகாத நிலையில் பாகுபலி படத்தின் பிரபலமும் இதே சர்ச்சையில் தற்போது சிக்கியுள்ளார்.

அடுத்தடுத்து போலிஸில் சிக்கும் தெலுங்கு சினிமா ஹீரோக்கள் : பாகுபலிக்கு நேர்ந்த சம்பவம்!

ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் வந்த காரை போலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அந்த காரின் நம்பர் தவறுதலாக இருந்ததாலும், காரின் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருந்ததாலும் போலிஸார் காரை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

அப்போது இந்த கார் நடிகர் பிரபாஸ்க்கு சொந்தமானது என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் காரில் அப்போது இல்லை. இதையடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறி நடிகர் பிரபாஸ்க்கு ரூ. 1450 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், மனோஜ் மன்சு, நாக சைதன்யா, பிரபாஸ் என தொடர்ச்சியாக தெலுங்கு நடிகர்கள் சாலை போக்குவரத்து வீதிகளை மீறி அபராதம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories