சினிமா

டிராஃபிக் விதிகளை மீறும் தெலுங்கு பிரபலங்கள்: அல்லு அர்ஜூன், ஜூனியர் NTR-ஐ தொடர்ந்து சிக்கிய நாக சைதன்யா!

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கு அபராதம் விதித்தது ஐதராபாத் காவல்துறை.

டிராஃபிக் விதிகளை மீறும் தெலுங்கு பிரபலங்கள்: அல்லு அர்ஜூன், ஜூனியர் NTR-ஐ தொடர்ந்து சிக்கிய நாக சைதன்யா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

போக்குவரத்து விதிகளை மீறுவதாக தெலுங்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்களிடம் இருந்து ஐதராபாத் போலிஸார் அபராதம் வசூல் செய்து வரும் நிகழ்வு அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் நாக சைதன்யாவும் போலிஸின் அபராதத்தில் இருந்து தப்பவில்லை.

அதன்படி கார் கண்ணாடி நிற விதிகளை பின்பற்றாமல் நாக சைதன்யாவின் Toyota Vellfire காரில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்திருக்கிறது.

இதனைக் கண்டறிந்த ஐதராபாத் போக்குவரத்து போலிஸார் இன்று (ஏப்.,12) நாக சைதன்யாவின் காரை நிறுத்தி அவருக்கு 700 ரூபாய்க்கான அபராதத்தை விதித்ததோடு அவரது காரில் ஒட்டப்பட்டிருந்த கருப்பு நிற ஸ்டிக்கரையும் கிழித்தெறிந்தனர்.

முன்னதாக இதே போன்று போக்குவரத்து விதிகளை மீறியதாக நடிகர்கள் அல்லு அர்ஜூன், ஜூனியர் என்.டி.ஆர், மஞ்சு மனோஜ், நந்தாமுரி கல்யாண ராம், இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் ஆகியோருக்கும் ஐதராபாத் போலிஸார் அபராதம் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories