சினிமா

திருமணமான கையோடு ஆலியா பட்’க்கு நெட்ஃப்ளிக்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. கங்குபாய் ரசிகர்கள் உற்சாகம்!

திருமணமான கையோடு ஆலியா பட்’க்கு நெட்ஃப்ளிக்ஸ் கொடுத்த சர்ப்ரைஸ்.. கங்குபாய் ரசிகர்கள் உற்சாகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

`F3' படத்தின் ஆஹா பாடல் ப்ரோமோ!

அனில் ரவிப்புடி இயக்கத்தில் வெங்கடேஷ், வருண் தேஜ் நடித்து 2019ல் வெளியான தெலுங்குப் படம் F2'. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து F2வின் அடுத்த பாகமும் வெளியாகும் என அறிவித்தார் இயக்குநர். அதன்படி இதன் இரண்டாவது பாகமாக F3' படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

சென்ற பாகத்தைப் போலவே இதிலும் வெங்கடேஷ், வருண் தேஜ் இணைந்து நடித்திருக்கிறார்கள். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்தப் படத்திலிருந்து ஏற்கெனவே ஒரு பாடல் வெளியானது. இரண்டாவதாக `ஆஹா' என்ற பாடலை 22ம் தேதி வெளியிட உள்ளனர். தற்போது அந்தப் பாடலுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தப் படம் மே 27ம் தேதி வெளியாகவுள்ளது.

சிவராஜ்குமார் - பிரபுதேவா இணைந்து நடிக்கும் படம்!

கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் நடிப்பில் பைராகி படம் ரிலீஸுக்குத் தயாராக உள்ளது. இதற்கடுத்து சில கன்னடப் படங்களில் ஒப்பந்தமாகியிருக்கிறார். அதில் ஒரு படம் யோக்ராஜ் பட் இயக்கத்தில் உருவாகிறது. இதில் சிவராஜ்குமாருடன் இணைந்தி பிரபுதேவாவும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. `குலடல்லி கீல்யாவுடோ' (Kuladalli Keelyavudo) எனத் தற்போது பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படம் 1960 - 1970களில் நடக்கும் ஒரு பீரியட் படமாக உருவாகிறது. இந்தப் படம் மே மாதம் துவங்கப்பட இருக்கிறது.

நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் அலியா பட்டின் `கங்குபாய்'

பாலிவுடின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் சஞ்சஜ் லீலா பன்சாலி. இவரது இயக்கத்தில் அலியா பட் நடித்த `கங்குபாய் கதியாவடி' படம் வெளியானது. ஹூசைன் ஸைடி எழுதிய `மாஃபியா குயின்ஸ் ஆஃப் மும்பை' என்ற புத்தகத்தின் திரைப்பட வடிவமாக உருவானது இந்தப் படம்.

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பாராட்டுகளைக் குவித்தது படம். தற்போது இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. வரும் 26ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளது. இந்தியுடன் சேர்த்து தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாக உள்ளது கங்குபாய்.

வெப்சீரிஸ் இயக்கும் ரோஹித் ஷெட்டி!

பாலிவுட் இயக்குநர் ரோகித் ஷெட்டி ஆக்ஷன் படங்கள் எடுப்பதில் பிரபலமானவர். அவர் எடுக்கும் படங்கள் எல்லாம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை புரியும். குறிப்பாக இவர் எடுத்த `சிங்கம்', `சிங்கம் ரிட்டர்ன்ஸ்', `சிம்பா', `சூர்யவன்ஷி' போன்ற போலீஸ் படங்கள் மிகப் பெரிய ஹிட்டானது. கூடவே, மார்வல் யுனிவர்ஸ் போல, அவர் படங்களில் உள்ள போலீஸ் கதாபாத்திரங்களை அவர் எடுக்கும் மற்ற போலீஸ் படங்களிலும் பயன்படுத்திக் கொள்வார்.

தற்போது போலீஸ் கதையை ஒரு வெப் சீரிஸாக இயக்க இருக்கிறார் ரோஹித் ஷெட்டி. இதில் ஹீரோவாக சித்தார்த் மல்ஹோத்ரா நடிக்கிறார். `இன்டின் போலீஸ் ஃபோர்ஸ்' எனப் பெயரிடப்பட்ட இந்த சீரிஸ் அமேஸான் ப்ரைமில் வெளியாக உள்ளது.

நைட் ஷ்யாமளன் இயக்கத்தில் நடிக்கும் தேவ் பட்டிஸ்டா!

ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் நைட் எம் ஷாயமளன். இவர் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாம் வித்யாசமான கதைக் களத்துடன் ரசிகர்களைக் கவரும். கடைசியாக இவர் இயக்கிய ஓல்ட்' படம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இவர் அடுத்ததாக ஒரு படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு Knock at the cabin' எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஜோனதன், பென், நிக்கி அமுகா ஆகியோர் நடிக்கிறார்கள். மேலும் பிரபல மல்யுத்த வீரர் தேவ் பட்டிஸ்டா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories