சினிமா

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்.. வடிவேலு - பிரபுதேவா மீண்டும் இணையும் படம்! #5in1_Cinema

வடிவேலு ஆடும் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்.. வடிவேலு - பிரபுதேவா மீண்டும் இணையும் படம்! #5in1_Cinema
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்!

நயன்தாரா நடிப்பில் `கோலமாவு கோகிலா', சிவகார்த்திகேயன் நடிப்பில் `டாக்டர்' போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் நெல்சன். அடுத்ததாக விஜய் நடிப்பில் இவர் இயக்கிய `பீஸ்ட்' படம் சமீபத்தில் வெளியானது. இதற்கு அடுத்ததாக ரஜினி நடிக்கும் 169வது படத்தை நெல்சன் இயக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

`பீஸ்ட்' படம் வசூல் ரீதியாக வெற்றியடைந்தாலும், படம் பற்றிய சில நெகட்டிவ் கருத்துகள் பலராலும் பகிரப்பட்டது. இதனால் ரஜினி படத்தை நெல்சன் இயக்குவது சந்தேகம் தான் என சில வதந்திகள் உலவி வந்தன. இதனை மறுக்கும் விதமாக தனது ட்விட்டர் பயோவில், தான் இயக்கத்தில் உருவான படங்களின் பட்டியலில் `தலைவர் 169' என்பதையும் சேர்த்திருக்கிறார். எனவே இதன் மூலம் ரஜினி படத்தை இயக்குவதில் எந்த மாற்றமும் இல்லை என உறுதி செய்திருக்கிறார் நெல்சன்.

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நெல்சன்.. வடிவேலு - பிரபுதேவா மீண்டும் இணையும் படம்! #5in1_Cinema

வடிவேலுவின் `நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'ல் பிரபுதேவா!

நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்” படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தை சுராஜ் இயக்கிவருகிறார். தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, இந்தப் படத்தின் பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.

வடிவேலு ஆடும் இப்பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கிறார். சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது.

`சாகுந்தலம்' பட டப்பிங்கை முடித்த சமந்தா!

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்திருக்கும் படம் ‘சாகுந்தலம்'. இதன் படப்பிடிப்புகள் நிறைவடைந்து, படத்துக்கான பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதில் சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், மோகன் பாபு, சச்சின் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் மகள் அல்லு அர்ஹா இந்தப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகிறார். தற்போது இந்தப் படத்தின் டப்பிங்கை பேசி முடித்திருக்கிறார் சமந்தா. எனவே விரைவில் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது சகுந்தலம்.

81 நிமிட சிங்கிள் ஷாட் படம் `369'

அறிமுக இயக்குநர் ஷிவா மாதவ் இயக்கத்தில் கே பாக்கியராஜ் நடித்திருக்கும் படம் `369'. 21 ஆண்டுகளுக்குப் பிறகு கே பாக்யராஜ் நாயகனாக நடிக்கும் படம் இது. இன்று இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. 81 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தை சிங்கிள் ஷாட்டில் படமாக்கியுள்ளது படக்குழு. மேலும் இது ஒரு சைன்ஸ்ஃபிக்ஷன் படமாக உருவாகியிருக்கிறது. விரைவில் இந்தப் படம் திரையரங்கில் வெளியாக உள்ளது.

ரன்வீர் சிங்கின் `ஜெயீஷ்பாய் ஜோர்தார்' பட டிரெய்லர்!

`83' படத்திற்குப் பிறகு ரன்வீர் சிங் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படம் `ஜெயீஷ்பாய் ஜோர்தார்'. இந்தப் படத்தில் ரன்வீர் சிங் ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். மேலும் இந்தப் படத்தின் மூலம் ஷாலினி பாண்டே இந்தியில் அறிமுகமாகிறார். திவ்யங்க் தக்கர் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். பெண் குழந்தையின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் இந்தப் படம் உருவாகியுள்ளது. தற்போது இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. மே 13ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது இந்தப் படம்.

சமையல் கலைஞரின் பயோபிக்கில் ஹூமா குரேஷி!

இந்தி சினிமாவின் முன்னணி நடிகை ஹூமா குரேஷி. தமிழில் ரஜினியின் `காலா', அஜித்தின் `வலிமை' போன்ற படங்களிலும் நடித்தார். தற்போது இவர் இந்தியில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

`தர்லா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பியுஷ் குப்தா இயக்குகிறார். மறைந்த, பிரபல சமையல் கலைஞர் தர்லா தலால் வாழ்க்கையை மையமாக கொண்டு அவரின் பயோபிக்காக உருவாகிறது இந்தப் படம். தற்போது இதன் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

banner

Related Stories

Related Stories