சினிமா

எதிர்பார்ப்பை கிளப்பும் 'Dunki’ டைட்டில் வீடியோ.. வித்தியாச முயற்சியால் ஈர்க்கும் ராஜ்குமார் ஹிரானி!

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சற்று முன்பு வெளியாகியுள்ளது.

எதிர்பார்ப்பை கிளப்பும் 'Dunki’ டைட்டில் வீடியோ.. வித்தியாச முயற்சியால் ஈர்க்கும் ராஜ்குமார் ஹிரானி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஷாருக்கான். 2018ல் வெளியான `ஸீரோ' படத்திற்குப் பிறகு ஷாருக் நடிப்பில் வேறு எந்த படமும் வெளியாகவில்லை. சமீபத்தில்தான் அடுத்து நடிக்கும் படமாக `பதான்' படத்தை அறிவித்தார் ஷாருக்கான்.

அடுத்த ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி வெளியாக உள்ளது `பதான்'. தற்போது இவரின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்தப் படத்தை ராஜ்குமார் ஹிரானி இயக்குகிறார் என்றும் படத்தின் பெயர் `டன்கி' எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் நாயகியாக டாப்ஸி நடிக்க இருக்கிறார். இந்தப் படம் அடுத்த ஆண்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ சற்று முன்பு வெளியாகியுள்ளது.

முன்னாபாய் MBBS, 3 இடியட்ஸ், பிகே உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை இயக்கிய பிரபல ராஜ்குமார் ஹிரானி, ஷாருக்கானுடன் இணைந்துள்ள படத்தின் ப்ரோமோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்த ப்ரொமோவில், ராஜ்குமார் ஹிரானி படத்தில் வரும் கதாபாத்திரங்கள் குறித்து வியக்கிறார் ஷாருக்கான். தொடர்ந்து, தாங்கள் இணையும் திரைப்படத்தின் அம்சங்கள் குறித்து ராஜ்குமாரிடம் கேட்கிறார் ஷாருக்கான்.

இந்த டைட்டில் அறிவிப்பு வீடியோ ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஷாருக்கான் நடிப்பில் இப்படம் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories