சினிமா

KGF படக்குழுவின் அடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்: 3 விருதுகளுக்கு தேர்வாகிய ‘புர்கா’!

கலையரசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘புர்கா’ படம் மூன்று விருதுகளுக்கு தேர்வாகியுள்ளது.

KGF படக்குழுவின் அடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்:
3 விருதுகளுக்கு தேர்வாகிய ‘புர்கா’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. 3 விருதுகளுக்கு தேர்வாகிய கலையரசனின் ‘புர்கா’!

சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் கலையரசன், மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘புர்கா’. இந்த படம் நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் மூன்று பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர் மற்றும் நடிகை ஆகிய பிரிவுகளில் இந்த படம் தேர்வாகியுள்ளது.

2. ‘நிலை மறந்தவன்’ போஸ்டர் வெளியானது!

புஷ்பா, விக்ரம் படங்களை தொடர்ந்து பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘நிலை மறந்தவன்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. பிரபல மலையாள இயக்குனர் அமல் நீரத் இயக்கிய இந்தப் படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக அவரது மனைவி நஸ்ரியா நடித்துள்ளார். மலையாளத்தில் டிரான்ஸ் என்கின்ற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் நிலை மறந்தவன் என்கின்ற பெயரில் உருவாகியுள்ளது.

KGF படக்குழுவின் அடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்:
3 விருதுகளுக்கு தேர்வாகிய ‘புர்கா’!

3. கே.ஜி.எஃப்-3 மற்றும் சலார்-2 இண்டர்கனைக்‌ஷன் படமா?

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றியை பதிவு செய்திருக்கும் திரைப்படம் ‘கே.ஜி.எஃப் 2’. இதனை தொடர்ந்து பிரஷாந்த் நீல் பிரபாஸ் நடிப்பில் ‘சலார்’ எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படமும் இரண்டு பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், கே.ஜி.எஃப் 3-யும் சலார் 2ம் ஒரே படமாக தான் உருவாகும் என்றும் பிரபாஸும், ராக்கி பாயும் சேர்ந்து அந்த படத்தில் நடிப்பர் என்றும் பரவலாக பேசப்படுகிறது. இது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

4. ‘மாமனிதன்’ படத்தின் ட்ரைலர் வெளியானது!

விஜய் சேதுபதி - சீனு ராமசாமி கூட்டணியில் மூன்றாவது முறையாக உருவாகிருக்கும் படம் ‘மாமனிதன்’. இளையராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சேர்ந்து இசையமைத்திருக்கும் இந்த படத்தின் வேலைகள் முடிந்து நீண்ட நாட்களாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றது. விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி நடித்துக்கும் இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் வெளியாகியுள்ளது.

KGF படக்குழுவின் அடுத்த அப்டேட்.. ரசிகர்கள் உற்சாகம்:
3 விருதுகளுக்கு தேர்வாகிய ‘புர்கா’!

5. மீண்டும் பேட்மேன் கேரக்டருக்கு நடிகரை மாற்றும் டிசி!

டிசி காமிக்ஸ் திரைப்படங்களின் வரிசையில் பேட்மேன் கேரக்டருக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. இந்த கேரக்டரில் இதுவரை நான்கு பேர் நடித்துவிட்டனர். கடைசியாக வெளியான ‘தி பேட்மேன்’ படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடித்திருந்தார். ஆனால், அவருக்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை எனவே அவெஞ்சர், ட்யூன் போன்ற பிரம்மாண்ட படங்களில் நடித்துள்ள ஜோஷ் ப்ரோலின் (Josh Brolin)-யை அடுத்து பேட்மேனாக ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories