சினிமா

பீஸ்ட்-க்கு பதில் RRR காட்சி ஓடியதால் அதிர்ச்சி.. டார்ச் அடித்து ஆபரேட்டரை அலெர்ட் செய்த ரசிகர்கள்!

பீஸ்ட் படத்தின் போது தவறுதலாக ஆர்.ஆர்.ஆர். படத்தின் காட்சி ஓடியதால் பரபரப்பு.

பீஸ்ட்-க்கு பதில் RRR காட்சி ஓடியதால் அதிர்ச்சி.. டார்ச் அடித்து ஆபரேட்டரை அலெர்ட் செய்த ரசிகர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் விஜய்யின் 65வது படமான பீஸ்ட் ரசிகர்களின் பெரும் ஆரவாரத்தோடு நேற்று (ஏப்.,13) திரையரங்குகளில் வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் கலக்கி வருகிறது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என பல நட்சத்திரங்கள் பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைத்து காட்சிகளிலும் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பட்டாளமாக குவிந்து வருகிறார்கள் மக்கள்.

பீஸ்ட்-க்கு பதில் RRR காட்சி ஓடியதால் அதிர்ச்சி.. டார்ச் அடித்து ஆபரேட்டரை அலெர்ட் செய்த ரசிகர்கள்!

இப்படி இருக்கையில், மதுரையில் உள்ள திரையரங்கு ஒன்றில் பீஸ்ட் படம் திரையிடப்பட்டிருக்கிறது. முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதி படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்த போது பீஸ்ட் படத்திற்கு பதில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். படம் திரையிடப்பட்டிருக்கிறது.

இதனால் ஆவேசமடைந்த ரசிகர்கள் ஆபரேட்டர் அறையை நோக்கி செல்போன் டார்ச் லைட்டை அணையவிட்டபடி பீஸ்ட் படத்தை போடும் படி கூறியிருக்கிறார்கள். இதனையடுத்து விளம்பரங்கள் போடப்பட்ட பின்னர் பீஸ்ட் படத்தின் இரண்டாம் பாதி திரையிடப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories