சினிமா

இவர் இயக்கத்தில் நடிக்கனும்.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்; இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன..?

இவர் இயக்கத்தில் நடிக்கனும்.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்; இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன..?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. பீஸ்ட், கே.ஜி.எஃப் 2 தவிர இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன..?

விஜய்யின் பீஸ்ட் மற்றும் கேஜிஎஃப் 2 ஆகிய படங்கள் திரையரங்கில் வெளியாகியுள்ள நிலையில்,இந்த வாரம் ஓடிடியில் மொத்தம் 8 படங்கள் வெளியாகிறது. இதில் ஆஹா தமிழில் செல்ஃபி, பிரியாமணியின் ‘பாமா கலபம்’, நிவெதா பெத்துராஜின் ‘ப்ளட்டி மேரி’ என மூன்று படமும், சோனி லிவ் தளத்தில் ஜேம்ஸ் மற்றும் ஆடவலு மீக்கு ஜோஹார்லு ஆகிய இரண்டு டங்களும், சன் நெக்ஸ்டில் நாய் சேகர், ஜீ 5ல் என்ன சொல்ல போகிறாய், அமெசான் ப்ரைமில் வெயில் ஆகிய படங்கள் வெளியாகிறது.

2. விக்ரம் படத்தின் ரிலீஸ் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் படக்குழு..

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸுக்கு இன்னும் 50 நாட்களே இருக்கும் நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தனது சமூக வலைத்தளத்தில் ‘விக்ரம்’ படத்தின் மாஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. படம் வரும் ஜூன் 3ஆம் தேதி திரைக்கு வருகிறது.

3. Bhool Bhulaiyaa 2 படத்தின் டீஸர் வெளியானது...

கார்த்திக், கியாரா, தபு ஆகியோர் நடிப்பில் அனீஸ் பாஸ்மீ இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘Bhool Bhulaiyaa 2’. ஹாரர் கதைக்களமான இதன் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதன் டீஸ்ர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

4. இவர் கூட ஒரு படம் பண்ணனும்னு ஆசை.. மனம் திறந்த பிரியா பவானி சங்கர்!

நடிகை பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் "எந்த இயக்குனர் படத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்" என கேள்வி கேட்டார். அதற்கு பிரியா "இயக்குனர் வெற்றிமாறனின் திரைப்படத்தில் ஒரு அங்கமாக இருக்க ஆசைப்படுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

5. முத்தையாவுடன் கருத்து வேறுபாட்டில் கமல்..!

கார்த்தி நடிப்பில் விருமன் படத்தை இயக்கிவரும் முத்தையா அடுத்து கமலின் ராஜ்கமல் நிறுவனத்திற்கா ஆர்யா நடிப்பில் ஒரு படம் இயக்க இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், கமலுக்கும் முத்தையாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, இதனால் இதே கதையை ஆர்யாவை வைத்து வேறு நிறுவனத்திற்கு இயக்க முத்தையா இயக்க முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories