சினிமா

அடுத்த 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித் பங்கேற்க தடை.. ஆஸ்கர் கமிட்டியின் நடவடிக்கையால் ஹாலிவுட்டில் பரபரப்பு!

அடுத்த 10 ஆண்டுகளுக்கு வில் ஸ்மித் பங்கேற்க தடை.. ஆஸ்கர் கமிட்டியின் நடவடிக்கையால் ஹாலிவுட்டில் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கிய ஹரி..!

இயக்குனர் ஹரி நடிகர் அருண் விஜய்யை வைத்து ‘யானை’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் மே 6ஆம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஹரி தனது அடுத்த படத்துக்கான வேலைகளை தொடங்கியுள்ளார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கோபிசந்த் நடிப்பில் உருவாகும் தெலுங்கு படத்தை இயக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘தி லெஜண்ட்’ படத்தின் முதல் சிங்கிள் வெளியானது...

‘தி லெஜண்ட் சரவணா ஸ்டோர்’ சரவணன் அருள் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘தி லெஜண்ட்’. சரவண ஸ்டோர் ப்ரோடக்‌ஷன் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தை ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கி வருகின்றனர். ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இந்த படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. படத்தின் முதல் சிங்கிளாக ‘மொசலோ மொசலு’ வெளியாகியுள்ளது.

மீண்டும் ஹீரோவாக நடிக்கவிருக்கும் சதிஷ்...

கோலிவுட்டில் பல வெற்றிப்படங்களில் காமெடியாக நடித்து ‘நாய் சேகர்’ படத்தின் மூலம் ஹீரோவாகிருந்தார் சதிஷ். இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மீண்டும் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை வைபவ் நடிப்பில் வெளியான ‘சிக்ஸர்’ படத்தை இயக்கிய சாசி இயக்கவுள்ளார். இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார்.

‘காட் ஃபாதர்’ படப்பிடிப்பு தளத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர்...

முன்னணி தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடிப்பில் தற்போது ‘காட்ஃபாதர்’ படம் உருவாகிவருகிறது. மோகன்ராஜா இயக்கத்தில் லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகிவரும் இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பு தளத்தில் பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி சிரஞ்சீவியை சந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.

வில் ஸ்மித்திற்கு 10 ஆண்டுகள் தடை விதித்த ஆஸ்கர்..!

சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளர் கிறிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் அறைந்த நிகழ்வு உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த செயலுக்காக வில் ஸ்மித் வருத்தம் தெரிவித்தார், இருப்பினும் அடுத்த 10 ஆண்டுகள் ஆஸ்கர் விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்திற்கு தடை விதித்துள்ளது ஆஸ்கர் கமிட்டி.

banner

Related Stories

Related Stories