சினிமா

ஒரே வாரத்தில் 710 கோடி வசூல் அள்ளிய ‘RRR’... இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றி! #CinemaUpdates

ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வில் ஸ்மித்.

ஒரே வாரத்தில் 710 கோடி வசூல் அள்ளிய ‘RRR’... இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றி! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகும் ‘ஜெர்ஸி’ படத்தின் பாலிவுட் ரீமேக்!

2019ஆம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான படம் ‘ஜெர்ஸி’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகிருந்த இந்த படத்திற்கு தென்னிந்திய அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது. தொடர்ந்து இந்த படத்தின் பாலிவுட் ரீமேக் பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்றன. ஷாஹித் கபூர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் ட்ரைலர் வரும் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

2. ‘சல்யூட்’ படத்தால் துல்கருக்கு வந்த சிக்கல் நீங்கியது!

துல்கர் சல்மான் நடிப்பில் சமீபத்தில் டிஜிட்டல் தளத்தில் வெளியான ‘சல்யூட்’ படத்தால் அதிர்ச்சியடைந்த திரையரங்க உரிமையாளர்கள் இனி துல்கரின் படத்தை தியேட்டர்களில் வெளியிடமாட்டோம் என்று அறிவித்தனர். இந்த பிரச்சனை குறித்து துல்கர் தரப்பு விளக்கம் அளித்தது. அதில் ‘சல்யூட்’ படத்தை திரையரங்குகளில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்கு முன்பு வெளியிட்டு விடுவோம் என்று ஓ.டி.டி. தளத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தோம் ஆனால், கொரோனா காரணமாக தியேட்டரில் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியவில்லை. படத்தை மார்ச் 30-ஆம் தேதிக்குள் ஓ.டி.டி. வசம் ஒப்படைக்கவில்லை என்றால் அது ஒப்பந்தத்தை மீறிய செயல் ஆகிவிடும். எனவேதான் ஓ.டி.டி.யில் வெளியிடுகிறோம்'' எனக் குறிப்பிட்டிருந்தனர். இதனால் திரையரங்க உரிமையாளர்கள் சமாதானமாகி தடையை விளக்கிக்கொண்டனர்.

3. கதிர் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘இயல்வது கரவேல்’!

இளம் நடிகர் கதிர் நடிப்பில் அடுத்து உருவாகிவரும் படம் ‘இயல்வது கரவேல்’. எஸ்.எல்.எஸ் ஹென்ரி இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகளை தற்போது படக்குழு துவங்கியுள்ளது. கதிருடன் மகேந்திரன், யுவ லட்சுமி, கருபழனியப்பன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். எமினென்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

4. திரைப்பட சங்கத்தில் இருந்து வில் ஸ்மித் விலகல்!

பிரபல ஹாலிவுட் நடிகரான வில் ஸ்மித், சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில், King Richard படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதை வென்றார். அந்த மேடையில் தனது மனைவியை கேலி செய்த தொகுப்பாளரை முகத்தில் அரைந்தது உலகளவில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுக்கொண்டார். இந்நிலையில் ஹாலிவுட் நடிகர் சங்க உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் வில் ஸ்மித்.

5. ஒரே வாரத்தில் 700 கோடி வசூல் அள்ளிய ‘ஆர்.ஆர்.ஆர்’

எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. பேன் இந்திய படமாக உலகளவில் 10 மொழிகளில் வெளியான இந்த படத்திற்கு தொடர்ந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வெளியான முதல் வாரத்திலே படம் 710 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது இந்திய சினிமாவின் மிகப்பெரிய வெற்றி என்று திரைத்துறை கொண்டாடி வருகிறது.

banner

Related Stories

Related Stories