சினிமா

A.R.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ‘மூப்பில்லா தமிழே.. தாயே’ போட்டுக் காட்டிய இசைப்புயல்!

துபாய் சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சந்தித்துப் பேசினார்.

A.R.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ‘மூப்பில்லா தமிழே.. தாயே’ போட்டுக் காட்டிய இசைப்புயல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி வரும் மூப்பில்லா தமிழே தாயே என்ற ஆல்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரையிட்டு காண்பித்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அவர் துபாய் எக்ஸ்போ நிகழ்ச்சியில் தமிழ்நாட்டிற்கான அரங்கை இன்று திறந்து வைத்தார்.

துபாய் உலக கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை தொடங்கி வைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தார்.

A.R.ரஹ்மான் ஸ்டூடியோவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் : ‘மூப்பில்லா தமிழே.. தாயே’ போட்டுக் காட்டிய இசைப்புயல்!

அப்போது, துபாயில் உள்ள தனது ஸ்டூடியோவிற்கு வருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அழைப்பு விடுத்தார்.

அதனை ஏற்ற முதலமைச்சர் ஏ.ஆர்.ரஹ்மானின் ஸ்டுடியோவிற்கு சென்றார். அங்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைத்த ‘மூப்பில்லா தமிழே... தாயே’ என்ற ஆல்பத்தை முதலமைச்சருக்கு திரையிட்டுக் காட்டினார்.

banner

Related Stories

Related Stories