சினிமா

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சமந்தா! #CinemaUpdates

சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சமந்தா! #CinemaUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

1. திரைப்படமாகும் அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறு

2002ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டுவரை இந்தியாவின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் அப்துல் கலாம். மேலும் இவர் ஒரு விஞ்ஞானி என்பதும் இவரது தலைமையின் கீழ் இஸ்ரோ மிக சிறப்பாக செயல்பட்டது என்பது குறிப்பிடதக்கது. பாரத ரத்னா விருது உட்பட பல விருதுகளை பெற்ற அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும் ’விஞ்ஞானியன்’ என்று பெயரிடப்பட்ட இந்த படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஸ்ரீகுமார் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் அப்துல் கலாம் கேரக்டரில் நடிக்கவிருப்பது யார் என்பதை படக்குழு விரைவில் அறிவிக்கவுள்ளதாம்.

2. ஏப்ரலில் சிம்புவின் அடுத்த படம் வெளியாகிறது

சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் ’வெந்து தணிந்தது காடு’, 'பத்து தல' ஆகிய படங்களில் கவணம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் ‘மஹா’ திரைப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நாயகி ஹன்சிகா முக்கிய கதாபாத்திரத்தில் ந்நடித்திருக்கும் இந்தப் படத்தை வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. ஹன்சிகாவின் 50வது படமான இந்தப் படத்தை ஜமீல் இயக்கி உள்ளார்.

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சமந்தா! #CinemaUpdates

3. மீண்டும் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சமந்தா

அல்லு அர்ஜுனின் புஷ்பா பட தயாரிப்பாளரின் புதிய படத்தில் நாயகனாக நடிக்க விஜய் தேவரகொண்டா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க சமந்தா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே இவர்கள் காம்போவில் கீர்த்தி சுரேஷ் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகிருந்தது ‘மகாநடி’. இதனை தொடர்ந்து இவர்கள் மீண்டும் இந்த படத்தில் இணைய இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

4. ஆக்ஷன் ஹீரோவாக களமிறங்கும் 'வெள்ளிவிழா நாயகன்' மோகன்.

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் மோகன் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'ஹரா'. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. முதல் நாள் படப்பிடிப்பில் சண்டைக்காட்சி படம்பிடிக்கப்பட்டது. இதில் மோகன் உற்சாகமாக கலந்துகொண்டார்.

சிம்புவின் அடுத்த பட ரிலீஸ் தேதி அறிவிப்பு... விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாகும் சமந்தா! #CinemaUpdates

5. சிவா நடிப்பில் உருவாகிருக்கு ‘இடியட்’ படத்தின் ஸ்னீக்பீக்!

லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் பிரபலமான இயக்குனர் ராம்பாலா, கோலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானது சந்தானம் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் மூலம் தான். அதனை தொடர்ந்து ‘தில்லுக்கு துட்டு 2’ படமும் வெளியாகியது.

தற்பொழுது ராம்பாலா இயக்கத்தில் ரிலீஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘இடியட்’. நடிகர் சிவா, நிக்கி கல்ராணி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் டீஸர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி வைரலான நிலையில் படத்தை வரும் ஏப்ரல் 1ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் படத்தின் ஸ்னிக் பிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories