சினிமா

அடுத்தடுத்து வெளிவரும் அப்டேட்ஸ்... ‘ AK62' குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு - இயக்குநர் யார் தெரியுமா?

அஜித் நடிக்கும் 'AK 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.

அடுத்தடுத்து வெளிவரும் அப்டேட்ஸ்... ‘ AK62' குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு - இயக்குநர் யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அஜித் நடிக்கும் 'AK 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா நிறுவனம்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான 'வலிமை' திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து அஜித்தின் 61-வது படத்தை மீண்டும் ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கவுள்ளார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அஜித்தின் 62-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அஜித்தின் 62-வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை லைகா நிறுவனம் அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்க உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருப்பதாகவும், அடுத்தாண்டு ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் இப்படத்தை வெளியிட இருப்பதாகவும் லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories