சினிமா

எல்லா படமும் வருது; கோப்ரா ரிலீஸ் எப்போது? - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!

பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் கோப்ரா படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்த இயக்குநர்.

எல்லா படமும் வருது; கோப்ரா ரிலீஸ் எப்போது? - ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் அஜய் ஞானமுத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கி பிரபலம் அடைந்தவர் அஜய் ஞானமுத்து. இவர், நடிகர் விக்ரமை வைத்து, கோப்ரா என்ற படத்தை இயக்கி வந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள், சமீபத்தில்தான் முடிவடைந்தது.

இதையடுத்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை படக்குழுவினர், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் வெளியீட்டுத் தேதி தொடர்பான தகவலை இயக்குநர் அஜய் ஞானமுத்து தற்போது வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வரும் மே 26-ஆம் தேதி அன்று, கோப்ரா திரைப்படம் வெளியாக வாய்ப்புள்ளது என்று அப்படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை அறிந்த விக்ரமின் ரசிகர்கள், உற்சாகம் அடைந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு, விக்ரமிற்கு பெரிய வெற்றியை இந்த திரைப்படம் பெற்றுத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories