சினிமா

சீனாவில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் முதல் படம் : புது அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற கனா படம் சீன மொழியில் வெளியாகிறது.

சீனாவில் வெளியாகிறது சிவகார்த்திகேயனின் முதல் படம் : புது அறிவிப்பால் ரசிகர்கள் மகிழ்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். அண்மையில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த டாக்டர் படத்தின் மூலம் 100 கோடி வசூல் பட்டியலில் இணைந்து பாக்ஸ் ஆஃபிஸ் நாயகனாகவும் உருவெடுத்திருக்கிறார்.

கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுபோக, சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக உருவாகி வரும் அயலான் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.

இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன் தயாரிப்பில் கடந்த 2018ம் ஆண்டு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற கனா படம் சர்வதேச அங்கீகாரத்தை பெறுகிறது.

கிரிக்கெட்டில் விளையாடி சாதிக்க வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற ஏழை பெண்ணின் போராட்டம் நிறைந்த கதைக்களத்தை கொண்டதுதான் கனா திரைப்படம்.

அருண்ராஜா காமராஜா இயக்கத்தில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன் என பலரும் நடித்திருந்தனர். தற்போது இந்த படம் எதிர்வரும் மார்ச் 18ம் தேதி சீனாவில் சீன மொழியிலேயே வெளியாக இருக்கிறது.

இது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்திருக்கிறார் நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன்.

banner

Related Stories

Related Stories