சினிமா

ஒருத்தர் பாக்கியின்றி நன்றி கூறி சிவகார்த்திகேயன் உருக்கம்: தசாப்த நாயகனின் வைரல் ட்வீட்!

என் ஆரம்ப காலம் முதல் என்னுடைய வெற்றி-தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள் என சிவகார்த்திகேயன் உருக்கமாக கூறியுள்ளார்.

ஒருத்தர் பாக்கியின்றி நன்றி கூறி சிவகார்த்திகேயன் உருக்கம்: தசாப்த நாயகனின் வைரல் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தனது முதல் தசாப்தத்தை முடித்திருக்கிறார் தமிழ் சினிமாவின் செல்ல நாயகனாக இருக்கும் சிவகார்த்திகேயன். 2012ல் மெரினா படத்தின் மூலம் தொடங்கிய தனது சினிமா பயணம் தற்போது டான் ரிலீஸ் வரை நீண்டிருக்கிறது.

குறுகிய கால இடைவெளியில் மக்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்றிருக்கும் சிவகார்த்திகேயன் முன்னணி ஹீரோ படங்களை போன்று 100 கோடி வசூல் பட்டியலிலும் இணைந்துள்ளார்.

இப்படி இருக்கையில் தமிழ் சினிமாவில் தன்னுடைய 10 ஆண்டுகள் நிறைவடைந்ததற்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதன் விவரம் பின்வருமாறு:-

”இன்றோடு சினிமாவில் பத்தாண்டுகள்.... நம்பிக்கையை மட்டுமே மூலதனமாகக் கொண்டு துவங்கியது இந்தப் பயணம். இன்று உங்கள் இல்லங்களிலும் இதயங்களிலும் நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இடம் நான் நினைத்து கூட பார்த்திராத நிஜம்.

இத்தருணத்தில் எனக்கு முதல் பட வாய்ப்பளித்த இயக்குனர் பாண்டிராஜ் அவர்களுக்கும், அத்தனை தயாரிப்பாளர்களுக்கும், உடன் நின்று பயணித்த இயக்குனர்களுக்கும், தன்னோடு சேர்த்து என்னையும் மிளிரச் செய்த என் சக கலைஞர்களுக்கும், என் படங்களில் பணியாற்றிய அத்தனை தொழிலாளர்களுக்கும், தொழில் நுட்ப கலைஞர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும், பத்திரிக்கை, தொலைக்காட்சி, இணையதள நண்பர்களுக்கும், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் தாய்த்தமிழுக்கும், என்னை மகனாக, சகோதரனாக, நண்பனாக, குடும்பமாக ஏற்றுக்கொண்ட தமிழ் மக்களுக்கும், என் ஆரம்ப காலம் முதல் என்னுடைய வெற்றி-தோல்வி அனைத்திலும் உடனிருந்து என்னை கொண்டாடும் ரசிகர்களான என் சகோதர, சகோதரிகளுக்கும் பெரும் நன்றிகள்.

எப்போதும் நான் செய்ய நினைப்பதெல்லாம் - இன்னும் கடினமாக உழைத்து உங்களை மகிழ்விப்பதும், நீங்கள் எனக்கு அளித்திருக்கும் இந்த வாழ்வை பிறருக்கும் பயன்படுமாய் வாழ்வதும் மட்டுமே!!!

என் இதயத்தின் ஆழத்தில் இருந்து அன்பும் நன்றிகளும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே கோலிவுட்டில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சிவகார்த்திகேயனை வாழ்த்தி அவரது ரசிகர்கள் பல பதிவுகளை இட்டு வருகின்றனர். அதில் மெரினா படம் ரிலீஸாகும் போது அப்போது சிவகார்த்திகேயன் பதிவிட்ட ட்விட்டர் பதிவை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories