சினிமா

ஹோட்டல் அறையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி : நடந்தது என்ன?

ஓட்டல் அறையில் பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் சகெட் மர்மமான முறையில் மரணமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹோட்டல் அறையில் பிரபல ஹாலிவுட் நடிகர் மர்ம மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பிரபல ஹாலிவுட் நடிகர் பாப் சகெட். இவர் ஹாஃப் பேக்ட், டம்ப் அண்ட் டம்பரர், நியூயார்க் மினிட் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தனது தனித்துவமான உடல் மொழியால் நகைச்சுவைக்குப் பெயர்போனவர் பாச் சகெட். இதனால் இவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் ஓட்டல் அறையில் பாச் சகெட் மர்மமான முறையில் உயிரிழந்தது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் பாப் சகெட் புளோரிடாவிலுள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி அவரது அறைவெகு நேரமாகியும் திறக்காததால் ஊழியர்கள் கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக இருந்துள்ளார்.

இதனால் ஓட்டல் நிர்வாகம் இதுகுறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் உடற்கூராய்வு முடிவில், அவர் போதை மருந்து மற்றும் விஷம் போன்ற எதையும் உட்கொள்ளவில்லை என்பது தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கான அறிகுறியும் அவருக்கு இல்லை எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில், நடிகர் பாப் செகெட் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் அடிபட்டுள்ளதாக குடும்பத்தாரிடம் போனில் தெரிவித்துள்ளார். இதனால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories