சினிமா

லிஃப்ட்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம் : நடந்தது என்ன?

குக் வித் கோமாளி பிரபலம் புகழ் லிப்ஃட்டில் சிக்கிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிஃப்ட்டில் சிக்கிக் கொண்ட ‘குக் வித் கோமாளி’ பிரபலம் : நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் தொலைக்காட்சியில் வெளியாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் புகழ். தனது தனித்துவமான நகைச்சுவையால் தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம்பிடித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்ததை அடுத்து பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார். இதனால் குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் இவர் இடம்பெறாதது பலருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

இந்நிலையில், திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட தென்னூர் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உணவக திறப்பு நிகழ்ச்சிக்காகப் புகழ் சென்றிருந்தார். அந்த உணவகம் மூன்றாவது தளத்திலிருந்தது.

இதையடுத்து லிஃப்ட்டில் சென்று புதிய உணவகத்தைத் திறந்துவைத்தார் புகழ். பின்னர் அதே அளத்திலிருந்து நகைக்கடையைப் பார்வையிடுவதற்காக மூன்றாவது தளத்திலிருந்து லிஃப்டில் சென்றுள்ளார்.

அந்த லிஃப்ட்டில் இரண்டு பேர் மட்டுமே செல்ல முடியும் என்பதால் புகழுடன் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். இதனால் மற்றவர்கள் படி வழியாக தரைதளத்திற்குச் சென்று அவருக்காகக் காத்திருந்தனர். பத்து நிமிடத்திற்கு மேல் ஆகியும் லிஃப்ட் வராததால் கீழே காத்திருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் பத்து நிமிடம் கழித்து லிஃப்ட் கீழே வந்துள்ளது. அப்போது அவரிடம் விசாரித்தபோது திடீரென லிஃப்ட் முதல் தளத்தில் நின்றுவிட்டது. இதனால் தாமதமாகவிட்டது என கூறியதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

banner

Related Stories

Related Stories