சினிமா

விரைவில் ஷூட்டிங் செல்கிறது உயர்ந்த மனிதன் படக்குழு; அமிதாப்பின் நேரடி தமிழ் படத்தின் புது அப்டேட்!

தயாரிப்பாளருக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே இருந்த சில பிரச்னை காரணமாக உயர்ந்த மனிதன் படம் பாதியில் நின்றது.

விரைவில் ஷூட்டிங் செல்கிறது உயர்ந்த மனிதன் படக்குழு; அமிதாப்பின் நேரடி தமிழ் படத்தின் புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தி திரையுலகின் Big 'B' என இந்திய சினிமா பிரபலங்களால் அழைக்கப்பட்டு வரும் அமிதாப் பச்சன் 53 ஆண்டுகள் ஆகியும் இதுகாறும் அதே துடிப்போடு திரையில் நடித்து வருகிறார்.

ஆனால் இதுவரையிலும் ஒரு தமிழ் படங்களிலும் அமிதாப் பச்சன் நடித்தது இல்லை. இந்த வாய்ப்பு தமிழ் சினிமாவுக்கு எஸ்.ஜே.சூர்யாவின் உயர்ந்த மனிதன் படம் மூலம் நல்க இருந்தது. ஆனால் தயாரிப்பாளருக்கும் அமிதாப் பச்சனுக்கும் இடையே இருந்த சில பிரச்னை காரணமாக இந்த படம் தொடங்கிய சூட்டோடு நிறுத்தப்பட்டது.

விரைவில் ஷூட்டிங் செல்கிறது உயர்ந்த மனிதன் படக்குழு; அமிதாப்பின் நேரடி தமிழ் படத்தின் புது அப்டேட்!

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவான கள்வனின் காதலி படத்தை இயக்கிய தமிழ்வாணன் இயக்கத்திலேயே இந்த ‘உயர்ந்த மனிதன்’ படம் உருவாக இருந்தது.

கதை பிடித்து போனதால் அமிதாப் பச்சனும் இதில் நடிக்க சம்மதித்திருந்தார். மேலும் தமிழ் மற்றும் இந்தி என இரு மொழிகளிலும் படம் உருவாக இருந்தது. 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கிய படத்தின் வேலைகள் பச்சன் மற்றும் தயாரிப்பாளருக்கிடையேயான தகராறால் மே மாதமே நிறுத்தப்பட்டது.

அதன் பிறகு அமிதாப் பச்சனிடம் படக்குழு தரப்பில் சமாதானம் பேசியும் எதுவும் எடுபடவில்லை. அதன் பிறகு படத்தின் வேலைகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் உரிமையை தயாரிப்பாளர் புது தயாரிப்பாளரிடம் கொடுத்ததை அடுத்து உயர்ந்த மனிதன் படத்துக்கான பிரச்னை முடிவுக்கு வந்திருக்கிறது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகியிருக்கிறது. அதனை எஸ்.ஜே.சூர்யாவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதனை உறுதிப்படுத்தியிருக்கிறார்.

தமிழில் உயர்ந்த மனிதன் என உருவாக இருந்த இந்த படம் இந்தியில் The Great Man - Tera Yaar Hoon Main படமாக்கப்பட இருந்தது. இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ரம்யா கிருஷ்ணன் அமிதாப் பச்சனுக்கு ஜோடியாக நடிக்க இருந்ததாக முன்பு தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories