சினிமா

வெளியானது The Gray Man பட க்ளிம்ப்ஸ்.. வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்.. என்ன காரணம்?

ஹாலிவுட்டின் பிரபலங்களான கிரிஸ் எவன்ஸ் மற்றும் ரியான் காஸ்லின் உடன் சேர்ந்து நடித்துள்ளார் தனுஷ். இந்த கிரே மேன் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

வெளியானது The Gray Man பட க்ளிம்ப்ஸ்.. வருத்தத்தில் தனுஷ் ரசிகர்கள்.. என்ன காரணம்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்திய திரையுலகில் கோலிவுட் பாலிவுட் என ரவுண்டப்பில் இருக்கும் நடிகர் தனுஷ் the extraordinary journey of the fakir என்ற படம் மூலம் ஹாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்திருந்தார்.

அதன் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவுக்கு திரும்பிய அவருக்கு மீண்டும் ஒரு சர்வதேச திரைப்பயணத்தின் அங்கீகாரமாக அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் பட இயக்குநர் ரூசோ ப்ரதர்ஸின் இயக்கத்தில் தி கிரே மேன் என்ற படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை தனுஷ் பெற்றார்.

அதில் ஹாலிவுட்டின் பிரபலங்களான கிரிஸ் எவன்ஸ் மற்றும் ரியான் காஸ்லின் உடன் சேர்ந்து நடித்துள்ளார் தனுஷ். இந்த கிரே மேன் படத்தை பிரபல ஓடிடி தளமான நெட்ஃப்ளிக்ஸ் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

இந்த ஆண்டு தி கிரே மேன் படம் வெளியாக இருக்கும் நிலையில் அதனூடே உருவாகியுள்ள சில படங்கள் அடங்கிய ட்ரெய்லரை நெட்ஃப்ளிக்ஸ் யூடியூபில் வெளியிட்டிருந்தது. நேற்று வெளியிடப்பட்ட அந்த ட்ரெய்லர் வீடியோரவை இதுவரை 10 லட்சத்துக்கும் (1 மில்லியன்) மேலானோர் பார்த்துள்ளனர்.

இப்படி இருக்கையில், நெட்ஃப்ளிக்ஸின் அந்த preview வீடியோவில் இடம்பெற்ற கிரே மேன் படத்தின் காட்சிகளில் ஒரு இடத்தில் கூட தனுஷ் இல்லை. இதனால் அவரது ரசிகர்களுக்கு இது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. முன்னதாக விரைவில் தி கிரே மேன் படத்தின் டீசர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories