சினிமா

Money Heist கொரியன் ரீமேக்: நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்ட Netflix- பெர்லினாக நடிப்பது யார் தெரியுமா?

Money Heist தொடரின் கொரிய ரீமேக்கில் நடிக்கும் நடிகர்களின் அறிமுக டீசரை Netflix வெளியிட்டுள்ளது.

Money Heist கொரியன் ரீமேக்: நடிகர்களின் அறிமுக டீசரை வெளியிட்ட Netflix- பெர்லினாக நடிப்பது யார் தெரியுமா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Netflix -ல் வெளியான ஸ்பானிஷ் வெப் சீரிஸான Money Heist-க்கு உலகம் முழுவதும் பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்தத் தொடரின் முதல் சீசன் 2017ஆம் ஆண்டு மே 2ஆம் தேதி வெளியானது.

ஆனால், இந்தியா உட்பட பல நாடுகளில் Money Heist என்ற தொடர் ஒன்று இருப்பதே கொரோனா காலகட்டத்தில்தான் தெரியும். வீட்டில் முடங்கி இருந்தவர்களுக்கு இந்தத் தொடர் ஒரு பெரிய விருந்தாக அமைந்தது.

ஐந்து சீசன்களை கொண்ட இந்தத் தொடரின் கடைசிப்பகுதி 2021ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்த்துவந்த இந்த தொடருக்கு ஒரு முடிவு வந்து விட்டதால், வேறு தொடர்களைப் பார்க்க ரசிகர்கள் சென்று விட்டனர்.

இதையடுத்து Money Heist தொடரை கொரிய மொழியில் ரீமேக் செய்யப்போகிறோம் என Netflix அறிவித்திருந்தது. இந்நிலையில் கொரிய ரீமேக்கில் யார் யார் எந்தெந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற டீசரை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஆவலைத் துண்டியுள்ளது Netflix.

Money Heist தொடரின் நாயகனாகக் கருதப்படும் புரொஃபசர் கதாபாத்திரத்தில் ஜூ ஜி டேவும், பெர்லினாக ’ஸ்க்விட் கேம்’மில் கவனம் ஈர்த்த பார்க் ஹே சூவும், டோக்கியோவாக ஜூன் சாங் சியோ, ரியோவாக லீ ஹியூன் வூ, நைரோபியாக ஜாங் யூன் வூவும் நடிக்கிறார்கள்.

இதையடுத்து விரைவில் Money Heist கொரியன் ரீமேக் டீசர் வெளியாகும் எனவும் Netflix தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை அடுத்து Money Heist ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

banner

Related Stories

Related Stories