சினிமா

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1

தமிழ் சினிமா வரலாற்றுலயே உச்ச நட்சத்திரங்களோட படம் எதுவும் வராத பொங்கல் இதுவாகத்தான் இருக்கப் போகிறது.

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2021ல் திடீர் மறைவால் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய தமிழ் திரைப்பிரபலங்கள்!உலகம் முழுவதும் பண்டிகை காலங்களில் வரும் படங்கள், அதற்கான கொண்டாட்ட மனநிலை, தியேட்டரில் வரும் திருவிழா போன்ற உணர்வு தவிர்க்க முடியாதது. ஹாலிவுட்டை பொருத்தவரை வேலன்டைன், ஹாலோவீன், கிறிஸ்மஸ் என பல கொண்டாட்டங்களை மனதில் வைத்து, அதற்காகவே படங்களை எடுத்து வெளியிடுவதை இன்று வரை வழக்கத்தில் இருந்து வருகிறது.

அதேபோல இந்திய சினிமாவை பொருத்தவரை பொங்கல் தொடங்கி தீபாவளி வரை பல பண்டிகைகள், அந்த தேதியில் ரிலீஸ் ஆகக் கூடிய படங்களுக்கு பெரிய கவனம் குவியும். இந்த முறையும் பொங்கலுக்கு பல படங்கள் ரிலீஸ் ஆக இருக்கு. பொதுவாக பொங்கலுக்கு பெரிய ஹீரோக்களுடைய படங்கள், அதாவது தமிழ் சினிமாவின் முதல் ஐந்து இடங்களில் இருக்கும் உச்ச நட்சத்திரங்களோட படங்கள் எப்படியாவது ரிலீஸாகிவிடும்.

கடந்த ஆண்டு பொங்கல் வரைக்கும் நிலமை அப்படிதான் இருந்தது. ஆனா, இந்த ஆண்டும் அஜித்தோட `வலிமை' பொங்கலுக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால், கொரோனா காரணமா மறுபடி ஒரு முறை படம் தள்ளிவைக்கப்பட்டிருக்கு. ஒரு வகையில் தமிழ் சினிமா வரலாற்றுலயே உச்ச நட்சத்திரங்களோட படம் எதுவும் வராத பொங்கல் இதுவாகத்தான் இருக்கப் போகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு என்னென்ன தமிழ்ப் படங்கள் வருதுன்னு தான் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

கொம்பு வெச்ச சிங்கமடா (Tamil) - Jan 13

சசிக்குமார், மடோனா செபாஸ்டியன், சூரி, மகேந்திரன், ஹரீஷ் பெரேடினு பலரும் நடித்திருக்கும் படம் `கொம்பு வெச்ச சிங்கம்டா'. இந்தப் படத்தை `சுந்தரபாண்டியன்', `இது கதிர்வேலன் காதல்' போன்ற படங்கள இயக்கிய எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கார். என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு திபு நினன் தாமஸ் இசையமைச்சிருக்கார்.

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1

சுந்தரபாண்டியன் படத்துடைய ஸ்ப்ரிட் சீக்குவலா இருக்கும்னு சொல்லியிருக்கார் படத்தோட இயக்குநர் பிரபாகரன். அதோட சுந்தரபாண்டியன் படத்துக்கு அப்பறமா சசிக்குமார் - எஸ்.ஆர்.பிரபாகரன் கூட்டணி இணையிறதால படத்துமேல இருக்கும் எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கு. இந்தப் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாகுது.

Naai Sekar (Tamil) - Jan 13

காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவா அறிமுகமாகும் படம் `நாய் சேகர்'. இதுல அவருக்கு ஜோடியா பவித்ர லக்ஷ்மி நடிச்சிருக்காங்க. கூடவே ஜார்ஜ் மரியம், லிவிங்க்ஸ்டன், இளவரசு, ஸ்ரீமன், ஞானசம்பந்தம், மனோபாலா, சுவாமிநாதன்னு நிறைய பேர் படத்துல நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் இயக்கியிருக்கார். ஏ.ஜி.எஸ் தயாரிப்புல உருவான இந்தப் படத்துடைய தலைப்பு அறிவிச்ச பின்னால, அதே தலைப்பு வடிவேலு - சுராஜ் படத்துக்கு வைக்கப்பட்டு பரபரப்பா பேசப்பட்டுச்சு.

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1

அதையும் தாண்டி படத்துடைய டீசர் எல்லோரையும் கவரும் விதமா இருந்தது. வீட்ல வளர்க்கும் செல்லப்பிராணியோட குணம் ஒரு மனுஷனுக்கும், மனுஷனோட குணம் அந்த செல்லப்பிராணிக்கும் வந்தா என்ன ஆகும்ன்ற ஃபேண்டசி தான் படத்தோட கதை. இதுல இன்னொரு ஹைலைட் என்னென்னா, படத்துல வரும் செல்லப் பிராணிக்கு, பின்னணி குரல் குடுத்திருக்கறது அகில உலக சூப்பர்ஸ்டார் சிவா. ஆக மொத்தம் ஒரு ஜாலியான படமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இந்தப் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கு.

Carbon (Tamil) - Jan 13

விதார்த் - தன்யா பாலகிஷ்ருஷ்ண நடிச்சிருக்கும் படம் `கார்பன்'. மாரிமுத்து, மூணார் ரமேஷ், வினோத் சாகர் ஆகியோரும் நடிச்சிருக்காங்க. இந்தப் படத்தை விஜய் ஆண்டனி நடிப்புல வெளியான `அண்ணாதுரை' படத்தை இயக்கின ஸ்ரீனுவாசன் இயக்கியிருக்கார். இது விதார்த்துடைய 25வது படமா வெளியாக இருக்கு. படத்தோட டிரெய்லர் ஆடியன்ஸோட கவனத்தை கவரும்படியா இருக்குன்னே சொல்லல்லாம்.

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1

ஹீரோவுக்கு வர்ற எல்லா கனவுகளும் நிஜத்துலயும் நடக்குது. அப்படி அவருக்கு வரக் கூடிய ஒரு கனவுல அவருடைய அப்பா ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போறதா வருது. அது நிஜத்துலயும் நடக்குது. இதுக்குப் பிறகு என்ன நடக்குதுன்றதுதான் கதைக் களம். கண்டிப்பா ஒரு வித்யாசமான என்டர்டெய்னர் படமா இருக்கும்னு எதிர்பார்க்கப்படுது. இந்தப் படம் ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கு.

Enna Silla Pogirai (Tamil) - Jan 13

அஷ்வின் குமார், புகழ், தேஜூ அஷ்வினி, அவந்திகா மிஷ்ரா நடிச்சிருக்கும் படம் `என்ன சொல்ல போகிறாய்'. இந்தப் படத்தை ஹரிஹரன் இயக்கியிருக்கார். சமீபத்துல இந்தப் படத்துக்கான பத்திரிகையாளர் சந்திப்புல அஷ்வின் பேசின பேச்சும், அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைளும் பலருக்கும் தெரிஞ்சதுதான். அது மூலமா இப்டி ஒரு படம் இருக்குன்றது பலரது கவனத்துக்கும் போச்சு.

உச்ச நட்சத்திரங்கள் இல்லாத பொங்கல்; இந்த ஆண்டு வெளியாகும் தமிழ் படங்கள் என்னென்ன? PART 1

என்னதான் நெகட்டிவான விஷயமா இருந்தாலும், ஒரு விதத்துல படத்துக்கு ஒரு விளம்பரமா அது அமைஞ்சது. இந்தப் படத்துடைய டிரெய்லர் பார்க்கும் போதே இது ஒரு முக்கோண காதல் கதையா இருக்கும்ன்றத புரிஞ்சுக்க முடியுது. தொலைக்காட்சி மூலமா மக்கள் மத்தியில பிரபலமானார் அஷ்வின். அதனால இந்தப் படத்து மேலயும் ஒரு எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கு. இந்தப் படம் ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு.

மருத (Tamil) - Jan 13

ராதிகா சரத்குமார், பருத்திவீரன் சரவணன், விஜி சந்திரசேகர், லவ்லின், வேலா ராமமூர்த்தி, மாரிமுத்து நடிச்சிருக்கும் படம் `மருத'. இந்தப் படத்த ஜி.ஆர்.எஸ் இயக்கியிருக்கார். கிழக்கு சீமையிலே டைப்ல அண்ணன் தங்கை பாசம், கிராமத்து வாழ்க்கை, உறவுகளுக்குள்ள நடக்குற பிரச்சனைனு படத்தோட ட்ரெய்லர்ல பல விஷயங்கள் இருக்கு. இதெல்லாம் இந்த காலத்துக்கு தகுந்த மாதிரி ரசிக்கும்படியா இருக்குமான்றது படத்தைப் பார்த்தா தான் தெரியும். இந்தப் படத்துல இன்னொரு ப்ளஸ் என்னென்னா, படத்துக்கு இசையமைச்சிருக்கறது நம்ம இசைஞானி இளையராஜா. இந்தப் பட ஜனவரி 13ம் தேதி வெளியாக இருக்கு.

banner

Related Stories

Related Stories