சினிமா

பிளாக் பஸ்டர் இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்; புத்தாண்டு பரிசாக வெளியானது SK20 அப்டேட்!

சிவகார்த்திகேயனின் 20வது படமாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் இந்த படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் கே.வி. இயக்கவுள்ளார்.

பிளாக் பஸ்டர் இயக்குநருடன் இணைந்த சிவகார்த்திகேயன்; புத்தாண்டு பரிசாக வெளியானது SK20 அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

டாக்டர் பட வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் டான் படம் ரிலீசுக்கு காத்திருக்கிறது. அதற்கடுத்தபடியாக அயலான் வரிசையில் உள்ளது.

இப்படி இருக்கையில் முதல் முறையாக தெலுங்கிலும் காலடி எடுத்து வைக்கிறார் சிவகார்த்திகேயன். அது தொடர்பான அறிவிப்பு புத்தாண்டை முன்னிட்டு இன்று வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் 20வது படமாக தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாக இருக்கும் இந்த படத்தை ஜதி ரத்னலு படத்தை இயக்கிய அனுதீப் கே.வி. இயக்கவுள்ளார்.

சிவாவுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் மற்றொரு புறம் ரித்து வர்மாவின் பெயரும் அடிபடுகிறது. இந்த படத்துக்கு தமன் இசையமைக்க இருக்கிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வர சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அண்மையில் நடிகர் தனுஷ் SIR எனும் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் சிவகார்த்திகேயனும் தெலுங்கில் நடிக்க இருக்கும் அறிவிப்பு தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories