சினிமா

”மதுபன் பாடலை 3 நாளில் நீக்க வேண்டும்..” - நடிகை சன்னி லியோனேவுக்கு ம.பி. பாஜக அமைச்சர் மிரட்டல் !

சன்னி லியோனேவின் ஆல்பம் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் மத்திய பிரதேச அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”மதுபன் பாடலை 3 நாளில் நீக்க வேண்டும்..” - நடிகை சன்னி லியோனேவுக்கு ம.பி. பாஜக அமைச்சர் மிரட்டல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பாலிவுட் நடிகையான சன்னி லியோனேவின் மதுபன் என தொடங்கும் பாடல் யூடியூபில் வெளியான நாள் முதல் இந்துத்துவ ஆதரவாளர்களால் சர்ச்சையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சரிகம மியூசிக் என்ற தளத்தில் வெளியாகியுள்ள இந்த மதுபன் மெயின் ராதிகா என்ற ஆல்பம் பாடலில் சன்னி லியோனே நடனமாடியுள்ளனர்.

டிசம்பர் 22ம் தேதி வெளியான இந்த பாடலை இதுவரையில் 1 கோடிக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இந்நிலையில், சன்னி லியோனே ஆடியுள்ள இந்த பாடலை நீக்குமாறு உத்தர பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்த இந்து மத சாமியார்கள் வற்புறுத்தி வருகின்றனர்.

ராதையின் பேரில் ஆபாச நடனமாடுவதால் அந்த பாட்டை நீக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இப்படி இருக்கையில், மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோதம் மிஸ்ரா சன்னி லியோனேவுக்கும் பாடல் குழுவினருக்கும் பகிரங்க மிரட்டலை விடுத்துள்ளார்.

அதில், பாடலை 3 நாட்களுக்குள் நீக்கி சன்னி லியோனே உள்ளிட்டோர் மன்னிப்பு கேட்காவிடில் போலிஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

இதனையடுத்து பாடல் வரிகளை மாற்றுவதாக சரிகம நிறுவனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories