சினிமா

அண்ணனை தொடர்ந்து தம்பியை இயக்கும் ’ராக்கி’ பட இயக்குநர் - எதிர்பார்ப்பை எகிற வைத்த தனுஷின் ட்வீட்!

இளம் இயக்குநரின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அண்ணனை தொடர்ந்து தம்பியை இயக்கும் ’ராக்கி’ பட இயக்குநர் - எதிர்பார்ப்பை எகிற வைத்த தனுஷின் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விக்னேஷ் சிவன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் வெளியீட்டில் வசந்த் ரவி, பாரதி ராஜா என பலரது நடிப்பில் உருவாகி ஆக்‌ஷன் படமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கிறது ராக்கி. இதனை இயக்கியவர் அருண் மாதேஸ்வரன்.

ஏற்கெனவே அருண் இயக்கத்தில் செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணி காயிதம் படம் உருவாகி வெளியீட்டுக்காக படத்துக்கு பிந்தைய வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது அருண் மாதேஸ்வரனின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி நடிகர் தனுஷை வைத்து அருண் இயக்கவிருப்பதாக தனுஷே ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

அதில், சினிமா வட்டாரத்தில் பரவிய ஊகங்கள் உண்மைதான். அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தில் நடிக்க இருப்பது என் அதிர்ஷடம் எனக் குறிப்பிட்டுள்ளார் நடிகர் தனுஷ்.

அதனை ரிட்வீட் செய்த இயக்குநர் அருண், என் மேல் வைத்த நம்பிக்கைக்கு நன்றி எனக் குறிப்பிட்டு, நான் தான் அதிர்ஷ்டசாலி என தெரிவித்துள்ளார். இந்த பதிவுகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ராக்கி படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் செல்வராகவன் மற்றும் தனுஷுடனான அருண் மாதேஸ்வரனின் படங்களுக்கு இப்போதிருந்தே எதிர்பார்ப்புகள் மேலோங்கியுள்ளது.

banner

Related Stories

Related Stories