சினிமா

”சிம்பு இப்டி பன்னது கஷ்டமா இருக்கு” - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதால் பரபரப்பு!

இளையராஜாவின் 2K வெர்ஷனாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியுள்ளார்.

”சிம்பு இப்டி பன்னது கஷ்டமா இருக்கு” - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதால் பரபரப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த படம் மாநாடு.

வித்தியாசமான கதையமைப்பில் உருவாகியிருந்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். வெகு நாட்களுக்கு பிறகு அண்மையில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து மாநாடு படத்தில் சக்ஸஸ் மீட் சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிம்புவை தவிர பிற படக்குழுவினர் பங்கேற்றிருந்தனர். விழாவின் போது இயக்குநரும் நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

”சிம்பு இப்டி பன்னது கஷ்டமா இருக்கு” - மாநாடு வெற்றி விழாவில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியதால் பரபரப்பு!

அதில், மாநாடு கதையின் மூலம் புதிய Genere-ஐ வெங்கட் பிரபு தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். யுவனின் இசையை கேட்டு மிரண்டு போயிட்டேன். இளையராஜாவின் 2K வெர்ஷனாக இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா என்ற அவர், எஸ்.ஜே.சூர்யா அட்டகாசமாக நடித்துள்ளார்.

இந்த படத்தின் மூலம் சிம்பு நல்ல உயரத்திற்கு சென்றுள்ளார். ஆனால் வெற்றி விழாவுக்கு சிம்பு வராதது மனசுக்கு கஷ்டமாக உள்ளது. தயாரிப்பாளருக்காக அவர் வந்திருக்க வேண்டும்.

ஷூட்டிங்கின்போது இருப்பது போலவே படம் வெளியான பிறகும் இருக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி தொடரும். படம் வெற்றியானதும் மாறிவிடக் கூடாது” என அவர் பேசியுள்ளார்.

banner

Related Stories

Related Stories