சினிமா

சமந்தாவை பின்னுக்குத் தள்ளிய அஜித்; யூடியூபிலும் முதலிடம் பிடித்த வலிமை!

யூடியூபிலும் முதலிடம் பிடித்துள்ளது வலிமை பட வீடியோ.

சமந்தாவை பின்னுக்குத் தள்ளிய அஜித்; யூடியூபிலும் முதலிடம் பிடித்த வலிமை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹூமா குரேஷி, கார்த்திகேயே உட்பட பலரும் நடித்திருக்கும் படம் வலிமை.

போனி கபூர் தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இறுதிகட்ட வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அதன்படி படத்தின் அப்டேட்கள் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக தள்ளிப்போன படத்தின் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில், நேற்று வெளியான வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் கவர்ந்துள்ளதாக இணையத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

அவ்வகையில் ஒரே நாளில் 4.5 மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ள வலிமை மேக்கிங் வீடியோ தற்போது யூடியூபின் தினசரி ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல வலிமை மேக்கிங் வீடியோ ரியாக்‌ஷன் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பல்லாயிரம் பேரால் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வலிமை படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

முன்னதாக புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் முதலில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories