சினிமா

வெற்றிவேலாக திரும்பி வந்த சூர்யா? வெளியானது எதற்கும் துணிந்தவன் முதல் பாடல் - ட்ரெண்டிங்கில் #VaadaThambi

எதற்கும் துணிந்தவன் படத்தின் முதல் சிங்கிள் பாடலை வெளியிட்டது படக்குழு.

வெற்றிவேலாக திரும்பி வந்த சூர்யா? வெளியானது எதற்கும் துணிந்தவன் முதல் பாடல் - ட்ரெண்டிங்கில் #VaadaThambi
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட் உலகின் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சூர்யா. அவரது 40வது படமாக பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கிறது எதற்கும் துணிந்தவன்.

பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. டி.இமான் இசையமைத்திருக்கிறார்.

2022ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து படத்தின் புரோமோஷன் உள்ளிட்ட வேலைகள் விறுவிறுவென நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் ‘வாடா தம்பி’ என்ற முதல் சிங்கிள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி.பிரகாஷ் பாடியிருக்கின்றனர்.

இதனையடுத்து வேல் பட கெட்டப்பில் எதற்கும் துணிந்தவன் படத்திலும் சூர்யா வலம் வருவதாக குறிப்பிட்டு ரசிகர்கள் வாடா தம்பி பாடலை #Vaadathambi என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பகிர்ந்து ட்ரெண்ட் செய்கின்றனர்.

banner

Related Stories

Related Stories