சினிமா

நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீங்க ‘ராஜா’ - நியூயார்க் Time Squareல் ஜொலிக்கும் நம்ம இளையராஜா!

அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் சதுக்கத்தில் இளையராஜா விளம்பரம் செய்து கவுரவிக்கப்பட்டுள்ளது.

நேற்று இல்லே நாளை இல்லே எப்பவும் நீங்க ‘ராஜா’ - நியூயார்க் Time Squareல் ஜொலிக்கும் நம்ம இளையராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் திரைப்பட இசையின் தனிப்பெரும் ஆளுமையாக இன்றும் இருந்து வருகிறார் இசைஞானி இளையராஜா. 1,000 திரைப்படங்களுக்கும் மேல் இசையமைத்து தனது இசையால் பலரை கட்டிப்போட்டுள்ளார்.

பேருந்து, கார்களில் பயணம் செய்பவர்கள் இளையராஜாவின் பாடல்களைக் கேட்காமல் அந்த பயணத்தை முடிக்கவேமுடியாது. குறிப்பாக இரவு நேர பயணம் முழுவதும் இளையராஜாவே நிறைந்து இருப்பார்.

பலர் தூங்குவதற்கு முன்பு இவரின் பாட்டை கேட்டுக்கொண்டே படுக்கையில் படுத்துக்கிடப்பர். இப்படி எல்லா இடங்களிலும் காற்றைப் போல இவரின் இசையும் எங்கும் நிறைந்து இருக்கும்.

இளையராஜாவின் ஒவ்வொரு ரசிகருக்கும் அவரது பாடல்கள் ஒவ்வொரு அனுபவத்தைத் தருகின்றன. இளையராஜாவின் பாடல்களையே வாழ்வாகக் கொண்ட ரசிகர்கள் பலர் இருக்கிறார்கள்.

80,90,2k கிட்ஸ் அவரை எல்லோருக்கும் பிடித்தமாக இருக்கும் ஒரே இசையமைப்பாளராக இளையராஜா ஒருவேரே இருந்து வருகிறார். எத்தனையோ புதிய இசையமைப்பாளர்கள் திரைத்துறையில் வெற்றி பெற்று வந்தாலும் 'இளையராஜா இளையராஜாதான்' என்றும் ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது உலகம்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் சதுக்கத்தில் இசைஞானி இளையராஜா இளையராஜாவை விளம்பரப் படுத்தி கவுரவப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டைம்ஸ் சதுக்கத்தில் விளம்பரப் படுத்தப்பட்டுள்ள இளையராஜாவின் வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories